கம்பராமாயணம் 7278 · யுத்த 14.220

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாருதி ஓதம் ஒத்தனன் - அனுமன் பாற்கடலை ஒத்தான்; அதன் அகத்து உறையும் நாதன் - அக்கடலிடத்தே அறிதுயில் கொண்டு தங்குகின்ற திருமாலை; ஒத்தனன் என்னினோ - இராமபிரான் போன்றான் என்றால்; நம்பன் துயில்கிலன் - தலைவனாம் அந்த இராமபிரானோ (அனுமன் மேல்) உறங்குகின்றான் இல்லை; மாருதி வேதம் ஒத்தனன் - (பின் எந்தவுவமை கூறலாம் எனில்) அநுமன் நான்கு வேதங்களைப் போன்றவன் ஆனான்; இராமன் வேதத்தின் சிரத்தின் போதம் ஒத்தனன் - இராமபிரானோ வேதத்தின் சிரம் என்று புகழப்படும் வேதாந்த ஞானத்தின் தெளிவைப் போன்றவன் ஆனான் என்று கூறலாம்; இதன் வேறு பொருவே இல்லை - இதனை விடச் சிறந்த உவமையே கூறுவதற்கில்லை.

அனுமன் கற்றுள்ள கல்வியின் ஆழமும் பெருமையும் அனுமனுக்கு நான்கு வேதங்களையும் இராமனுக்கு வேதங்களின் சாரமாய்த திகழும் பரம்பொருளையும் உவமித்தார் கவிஞர் பிரான். வேதங்களின் ஞானத்தைச் சாரமாய்ப் பிழிந்து தன் வாழ்வால் உலகுக்கு வாழ்ந்து காட்டியவன் இராமபிரான். ஆதலின், "வேதத்தின் சிரத்தின் போதம் ஒத்தனன்” என்றார் எனினுமாம். "நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள் உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?” (கம்ப. 3689) என்று வேதம் போதிக்கும் செயல்களே இராம வாழ்வு என உரைத்துள்ளமை காண்க. வேத சிரம்-உபநிடதம் என்பர் அனுமனை வேதம் போன்ற அறிவினன் என்பதனை, "இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூறக் கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி” (கம்ப.3768) என இராமபிரானே உரைத்துள்ளமை காண்க. இராமன் வேதாந்த போதன் என்பதனை, "இலங்கையிற் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதியாவார்" (கம்ப. 4740) என்பதனாலும் உணரல் ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Māruti was like the ocean; but if we say that he who dwells within it,
  2. the Lord, is like Irāmaṉ, the Master here is not sleeping;
  3. Māruti was like the Veda, and like the knowledge at the Veda's crown
  4. was Irāmaṉ: there is no other likeness than this.

What the poem says

The poet searches for a fit comparison for Irāmaṉ riding on Aṉumaṉ. Aṉumaṉ might be the ocean of milk with Tirumāl resting on it, but that fails, because Tirumāl sleeps on the ocean and Irāmaṉ here is wide awake for battle.

So he settles on another: Aṉumaṉ, deeply learned, is like the Vedas, and Irāmaṉ is like the knowledge at their summit, the Upaniṣads, the truth the Vedas carry. Elsewhere in the epic Irāmaṉ himself praises Aṉumaṉ as a sea of Vedic learning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ōtam ottaṉaṉ māruti; ataṉ akattu uṟaiyum
nātaṉ ottaṉaṉ eṉṉiṉō, tuyilkilaṉ nampaṉ;
vētam ottaṉaṉ māruti; vētattiṉ cirattiṉ
pōtam ottaṉaṉ irāmaṉ; vēṟu itiṉ ilai poruvē.