கம்பராமாயணம் 7279 · யுத்த 14.221
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தகுதியாய் நின்ற வென்றி மாருதி - இராமபிரானுக்குத் தக்கதொரு ஊர்தியாக நின்ற வெற்றி பொருந்திய அனுமனின்; தனிமை சார்ந்த மிகுதியை - தனித்தன்மை மிகுந்த சிறப்பினை; எவ்வண்ணம் விளம்பும் தன்மை? - எவ்வண்ணம் விளக்குவது?; வேறு நோக்கின் - பிறிதொரு வகையாக (அச்சிறப்பை) நோக்குவோம் ஆயின்; புகுதி கூர்ந்துள்ளார் வேதம் - ஞானம் மிக்கோர்க்கு உதவுவதாகிய வேதமானது; பொதுவுறப் புலத்து நோக்கும் - பொதுவாகத் தன் அறிவால் நுழைந்து நோக்கிக் கூறுகின்ற; பகுதியை ஒத்தான் - மூலப் பகுதியை ஒத்தான் (அனுமன்; வீரன், மேலைத்தன் பதமே ஒத்தான் - வீரனாகிய இராமன் அம்மூலப் பகுதிக்கும் மூலமாய் மேலே உள்ள தன் பரம பதத்தினையே ஒத்து விளங்கினான் (எனலாம்).
பகுதி - மூலப்பிரகிருதி. உலகம் மூலப்பிரகிருதியால் 24 தத்துவங்களாய் விரிந்தது. அவை மண்முதற் பூதங்கள் 5; அவை தோன்றற்குரிய நுண் மூலக்கூறுகள் (தன் மாத்திரைகள்) 5; அறிகருவிகள் (ஞானேந்திரியங்கள்) 5; செயற்கருவிகள் (கன்மேந்திரியங்கள்) 5; மனம், அகங்காரம், மகான், அவ்யக்தம் (விளக்கமில் பகுதி என அந்தக் கரணம் 4: ஆகிய இத்தத்துவங்கள் 24ம் அறிவிலாப் பொருள்கள் (அசித்து) ஆகும்; இருபத்தைந்தாவது தத்துவம் உயிர். (ஆத்மா - புருடன் இது அறிவித்தால் அறிவது இவற்றை உடலாகக் கொண்டு அறிவியாமலேயே அறியும் முழுஞானப் பரம்பொருள், உயிரை மூலப்பகுதியில் சேர்த்துப் படைத்துக் காத்து கரந்தும் பெருமாய விளையாட்டுப் புரிந்து அறியாமையோடு மிடைந்துள்ள உயிர்களை, தன் போன்றே முழுஞானப் பொருளாக மாற்ற முயல்வதே வாழ்வாகிறது. இப்பரம்பொருள் ஈசன் எனும் 26வது தத்துவமாறெது. ஆக, வைணவ தத்துவம் 26 ஆம் பரம்பொருள் மூலப்பிரகிருதியோடு தொடர்புடைய அசுத்த மாயா புவனங்கட்கு அப்பாலாய், சுத்த மாயா புவனமாகிய தன் பரம பதத்தில் உறைகிறது எனும் வைணவ சமயக் கோட்பாட்டை அனுமன், "பகுதியை ஒத்தான் வீரன், மேலைத்தன் பதமே ஒத்தான்" என்று அழகுற விளக்கியவாறு இது. மூலப்பிரகிருதியைக் கடந்து அதற்கு மேல், பரமபதம் விளங்குவது போல, அனுமனுக்கு மேலாக இராமன் விளங்கினான் என்பதாம். "மூலப் பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் அது பகுதியே ஆவது அல்லது விகுதி ஆகாது” எனும் பரிமேலழகர் (குறள் 27) கூற்றையும் உணர்க. புகுதி-ஞானம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Victorious Māruti, standing there as a fitting mount — his singular
- greatness, how can it be told? Seen another way,
- he was like primal Nature, which the Veda of the deeply wise surveys in its whole extent;
- and the hero was like his own supreme abode above it.
What the poem says
Another philosophical comparison. In Vaiṣṇava thought the world unfolds from primal Nature (prakṛti) into twenty-four principles; the soul is the twenty-fifth and the Lord the twenty-sixth, dwelling in his own pure realm, the Supreme Abode, beyond Nature.
So Aṉumaṉ, bearing Irāmaṉ, is like primal Nature, the base of all things, and Irāmaṉ standing above him is like the Supreme Abode that rises beyond it.