கம்பராமாயணம் 7280 · யுத்த 14.222
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மூரிநீர் அண்டம் எல்லாம் - வலிமை மிக்க நீர் சூழ்ந்த அண்டங்களையெல்லாம்; முன்னம் வயிற்றிடைக் கொண்ட ஆரியற்கு - முன்பு மகாப்பிரளய காலத்தில் (தன் திரு) வயிற்றிலே அடக்கிய மேலோனாகிய இராமபிரானுக்கு; அநேக மார்க்கத்தால் - பலவழிகளில் (போர்க்களத்தில் தோளில் ஏந்தி); இடம் வலமது ஆக - இடப்புறமாகவும் வலப்புறமாகவும், சாரிகை திரியலான - சாரிகை சுற்றித் திரிந்த; மாருதி - அனுமனுடைய; தாமப் பொன்தோள் - மாலை ஏந்திய அழகிய தோள்கள்; மேருவின் சிகரம் போன்றது என்னினும் - மேருமலையின் சிகரங்கள் போன்றவை எனினும்; வெளிறு உண்டாம் - குற்றம் உண்டாகும்.
சுற்றித் திரியும் அனுமனின் தோள்களுக்கு ஓரிடத்தில் நிலைத்திருக்கும் மேருவின் சிகரங்களை உவமை கூறல் பொருந்தாது என்பது முதற்குற்றம். அண்டம் முழுதும் உண்டவனைத் தாங்கித் திரியும் தோள்களுக்கு ஓர் அண்டத்தின் ஓரிடத்தில் இருக்கும் மேருவின் சிகரங்கள் உவமையாகா என்பது அடுத்த குற்றமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though one say they are like the peaks of Mēru, there is a flaw in it:
- for, bearing the Noble One who once held in his belly all the worlds with their mighty waters,
- by many paths, now to the left, now to the right,
- the garlanded golden shoulders of Māruti wheeled in battle-circles.
What the poem says
The poet rejects an obvious simile. Aṉumaṉ's golden shoulders might be likened to the peaks of Mēru, but that would be faulty twice over: Mēru's peaks stand still, while Aṉumaṉ's shoulders wheel left and right in the circling moves of battle; and Mēru stands in just one world, while these shoulders carry the Lord who once swallowed all the worlds at the great deluge.