கம்பராமாயணம் 7281 · யுத்த 14.223
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருந்தவர் - அறிய தவம் புரிந்த முனிவர்கள்; ஆசி சொல்லினர் - வாழ்த்துரைகளை வழங்கினர்; அறம் எனும் தெய்வம் - அறம் என்னும் கடவுள்; காசில் நல்நெடும் கரம் எடுத்து ஆடிட - குற்றமற்ற தன் அழகிய நீண்ட கரங்களை உயர்த்திக் கொண்டு கூத்தாட; கயிலை ஈசன் - சிவபெருமான்; நான்முகன் - பிரமன்; என்று இவர் முதலிய இமையோர் - என்ற இவர்கள் முதலாக உள்ள தேவர்கள்; பூசல் காணிய - (இராம இராவணப்) போரினைக் காண்பதற்காக; வந்தனர் அந்தரம் புகுந்தார் - வந்து ஆகாயத்தில் புகுந்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The great ascetics spoke blessings; the god called Dharma
- danced, raising its long, good, flawless arms; the Lord of Kayilai,
- the Four-faced One, and the other immortals with them
- came to watch the battle and entered the sky.
What the poem says
As Irāmaṉ, mounted on Aṉumaṉ, faces Irāvaṇaṉ, the sages bless him and Dharma, Righteousness itself pictured as a god, dances with raised arms, sure of its victory. Śiva, Lord of Kailāsa, Brahmā the four-faced creator and the other gods gather in the sky to watch the fight.