கம்பராமாயணம் 7287 · யுத்த 14.229
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறுத்து - (இராமபிரான் அரக்கன் கணைகளை) அறுத்தெறிந்து; மற்று -பின்பு; அவன் அயல் நின்ற அளப்பரும் அரக்கர் - அந்த இராவணனின் அருகே நின்ற அளத்தற்கரிய அரக்கர்; செறுத்து விட்டன படை எலாம் - வெகுண்டு விட்ட படைக்கலங்கள் யாவற்றையும், கணைகளால் சிந்தி - அம்புகளால் சிதறடித்து; இறுத்து வீசிய கிரிகளை - (அவர்கள்) அகழ்ந்து வீசிய மலைகளை யெல்லாம்; எரி உக நூறி ஒறுத்து - தீப்பொறி சிதறுமாறு பொடி செய்து ஒழித்து; அவர் தலைகளால் சிலமலை உயர்த்தான் - அந்த அரக்கர்களுடைய (அறுபட்ட) தலைகளால் சிலமலைகள் உயர்ந்து தோன்றுமாறு செய்தான்.
எல்லோரும் கல்லால் மலை செய்யலாவது இயல, பெருமான் தலையால் மலைசெய்ய வல்லான் என அவனது "அகடிதகட நா சாமர்த்தியம்” கூறியவாறு. தலைமலை ஒன்றல்ல என்பார், "சிலமலை செய்தான்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having cut them, with his arrows he scattered all the weapons
- loosed in fury by the countless demons standing near him,
- smashed to blazing dust the hills they had wrenched up and hurled,
- and, punishing them, raised up several mountains of their heads.
What the poem says
Irāmaṉ now turns on the demon soldiers around Irāvaṇaṉ. He scatters the weapons they hurl, grinds to fiery dust the hills they throw, and cuts off so many heads that they pile up into mountains. The commentary says that anyone can build a hill from stones, but the Lord builds them from heads, and not just one but several.