கம்பராமாயணம் 7289 · யுத்த 14.231
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மேல் நின்றான் - தன் புயத்தின் மீதிருந்த இராமபிரானுடைய; அம்பின் முன் செலும் - அம்பின் (வேகத்திற்கும்) முந்திச் செல்லுவான்; மனத்திற்கும் முன் செலும் அனுமன் - மனவேகத்திற்கும் முன் செல்கின்றவனான அனுமன்; ஓர் இமைப்பில் - ஒரு கணப்பொழுதில்; இம்பரான் எனின் - இவ்வுலகத்தினன் என நினைவோமாயின்; விசும்பினன் ஆகும் - ஆகாயத்தில் அடுத்த கணத்தில் இருப்பவன் ஆவான்; தும்பை சூடிய இராவணன் முகம் தொறும் தோன்றும் - தும்பை மாலையைச் சூடிப் போரிடுகின்ற பத்து தலைகளின் முன்பும் (மறுகணம்) தோன்றுவான்; வெம்பு வஞ்சகர் விழிதொறும் திரியும் - (அடுத்தகணம்) கொதிக்கின்ற வஞ்சகராம் அரக்கர் விழிகள் தோறும் காட்சிப்படுவான்.
ஓர் இமைப்பின்-இடைநிலைத் தீபகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If you thought him here below, in the blink of an eye he was in the sky;
- he appeared before every face of Irāvaṇaṉ, who wore the tumpai flower;
- he roamed before the eyes of every seething deceiver: Aṉumaṉ,
- who outran the arrows of the one standing upon him, who outran even the mind.
What the poem says
Aṉumaṉ, carrying Irāmaṉ, moves faster than Irāmaṉ's own arrows and faster than thought. One moment he seems on the ground, the next in the sky, then in front of each of Irāvaṇaṉ's ten faces, then before the eyes of every demon. Tumpai is the flower worn by warriors going into battle. The phrase 'in the blink of an eye', placed in the first line, governs all the actions that follow.