கம்பராமாயணம் 7291 · யுத்த 14.233

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அற்ற ஆழிய, அறுப்புண்ட அச்சினம், அம்போடு
இற்ற கொய் உளைப் புரவிய, தேர்க்குலம் எல்லாம்;
ஒற்றை வாளியோடு உருண்டன, கருங் களிற்று ஓங்கல்;
சுற்றும் வாசியும் துமிந்தன, அமர்க்களம் தொடர்ந்த.

பொருள் · Meaning in Tamil

அமர்க்களம் தொடர்ந்த - போர்க்களத்தில் தொடர்ந்து வந்த; தேர்க்குலம் எல்லாம் - தேர்க்கூட்டங்கள் யாவும்; அற்ற ஆழிய - துண்டித்த சக்கரங்களை உடையனவும்; அறுப்புண்ட அச்சின - முறிந்து போன அச்சுக்களையுடையனவும்; இற்ற கொய் உளைப் புரவிய - இறந்து போன கொய்து அலங்கரிக்கப் பெற்ற பிடரி மயிர்களையுடைய குதிரைகளையுடையனவும்; கருங்களிற்று ஓங்கல் - கரிய யானைகள் என்னும் மலைகள்; ஒற்றை வாளியோடு உருண்டன - ஒரே அம்புகள் பட்டு (களத்தில்) உருண்டு கிடந்தன; சுற்றும் வாசியும் துமிந்தன - சுற்றித்திரியும் குதிரைகளும் துண்டுபட்டுக் கிடந்தன.

"அமர்க்களந்தொடர்ந்த” என்பது கடைநிலைத் தீபகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With wheels cut off, with axles severed, with horses of trimmed manes
  2. broken by the arrows, were all the hosts of chariots;
  3. the dark bull elephants, like hills, rolled over, each with a single shaft;
  4. and the wheeling steeds were hewn apart, that had pressed on into the battlefield.

What the poem says

More of the destruction Irāmaṉ's arrows cause. The demons' chariots lie with wheels and axles broken and their fine horses dead; huge elephants, like mountains, are felled with one arrow each; the cavalry is cut to pieces. The closing phrase, 'that had pressed on into the battlefield', grammatically applies to every item in the verse, a figure the commentary names as a lamp placed at the end.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟṟa āḻiya, aṟuppuṇṭa acciṉa, ampōṭu
iṟṟa koy uḷaip puraviya, tērk kulam ellām;
oṟṟai vāḷiyōṭu uruṇṭaṉa, karuṅ kaḷiṟṟu ōṅkal;
cuṟṟum vāciyum tumintaṉa, amark kaḷam toṭarnta.