கம்பராமாயணம் 7292 · யுத்த 14.234

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேர் இழந்து, வெஞ்சிலைகளும் இழந்து, செந்தறுகண்
கார் இழந்து, வெம் கலின மாக் கால்களும் இழந்து,
சூர் இழந்து வன்கவசமும் இழந்து, துப்பு இழந்து,
தார் இழந்து, பின் இழந்தனர் நிருதர், தம் தலைகள்.

பொருள் · Meaning in Tamil

நிருதர்- அரக்கர்கள்; தேர் இழந்து - (தாம் ஏறி வந்த) தேர்களையும் இழந்து; வெம்சிலைகளும் இழந்து - தாம் பிடித்திருந்த விற்களையும் இழந்து; செந்தறு கண் - சிவந்த கொடிய கண்களுடன் கூடிய; கார் இழந்து - மேகம் போன்ற யானைகளையும் இழந்து; வெம்கலின மாக்கால்களும் இழந்து - கொடிய கடிவாளமுடைய குதிரைகளின் கால்களையும் இழந்து; சூர் இழந்து - சூரத்தனத்தையும் இழந்து; வன் கவசமும் இழந்து - வலிய கவசங்களையும் இழந்து; துப்பிழந்து - வலிமையையும் இழந்து; தார் இழந்து - மாலைகளையும் இழந்து; பின் தம் தலைகள் இழந்தனர் - பிறகு (இறுதியாக) தம்முடைய தலைகளையும் இழந்தழிந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Losing their chariots, losing their cruel bows too, losing the red-eyed, fierce
  2. cloud-dark elephants, losing the legs of their horses with cruel bits,
  3. losing their edge, losing their strong armour, losing their strength,
  4. losing their garlands, the Nirutar lost at last their own heads.

What the poem says

The demons (Nirutar) are stripped of everything step by step: chariots, bows, elephants, horses, courage, armour, strength and garlands, and finally their heads. The repeated verb 'losing' builds to the last and greatest loss.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēr iḻantu, veñ cilaikaḷum iḻantu, cen taṟukaṇ
kār iḻantu, veṅ kaliṉa māk kālkaḷum iḻantu,
kūr iḻantu vaṉ kavacamum iḻantu, tuppu iḻantu,
tār iḻantu, piṉ iḻantaṉar nirutar, tam talaikaḷ.