கம்பராமாயணம் 7293 · யுத்த 14.235

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரவின் நுண் இடை அரக்கியர், கணவர் தம் அற்ற
சிரமும் அன்னவை ஆதலின், வேற்றுமை தெரியார்
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்திக்
கரவு இல் இன் உயிர் துறந்தனர், கவவுறத் தழுவி.

பொருள் · Meaning in Tamil

அரவ நுண் இடை அரக்கியர் - பாம்பு போன்று நெளியும் நுண்ணிய இடைகளையுடைய அரக்கிமார்கள்; அற்ற தம் கணவர் சிரமும் - உயிரற்று இறந்து போன தம் கணவர்களின் தலையும்; அன்னவை ஆதலின் - குதிரை யானை போன்ற விலங்குகளின் தலைகளே ஆதலின்; வேற்றுமை தெரியா - தம் கணவர் தலைகட்கும் அவற்றின் தலைகட்குமிடையே வேறுபாடு உணர இயலாமையால்; புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி - குதிரையின் தலைகள், யானையின் தலைகள் முதலியவற்றைத் தம் கணவன் உடலோடு சேர்த்து வைத்து; கரவில் - மறைவான இடத்தில்; கவவு உறத்தழுவி - நன்கு பொருந்த அணைத்து; இன் உயிர் துறந்தனர் - தமது இன்னுயிரினைத் (தழுவியவாறே) இழந்தனர்

அரக்கர் சிலர் யானை, குதிரை ஆளி முதலியவற்றின் தலைகளைக் கொண்டிருந்தமையை வான் மீகமும் புகலும். "கரி, பரி, வேங்கை, மாக்கரடி, யாளி, பேய், அரி, நரி, நாய், என அணிமுகத்தினர்" (கம்ப. 5127) என்று முன்பும் கூறினார். "முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடியும் நிலையொடு தொகைஇ" (தொல். பொருள். 79) "மண்டு அமருள் மாறாமைந்தில் கொண்டான் தலையொடு கோல்வளை முடிந்தன்று" (புறப். வெண். காஞ்./3) (என இந்நிகழ்வினைப் புறப்பொருள் இலக்கண நூல்கள் புகலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demon women, their waists slender as a snake, since their husbands' severed
  2. heads were just like those, could not tell them apart;
  3. fitting to the bodies the heads of horses and the heads of elephants,
  4. in a hidden place they clasped them close and gave up their sweet lives.

What the poem says

A grim, strange scene. Some demons had the heads of horses, elephants and other beasts, as the poet said earlier. So the widows searching the field cannot tell their husbands' heads from those of the slain animals. They fit animal heads to their husbands' bodies, embrace them, and die there of grief.

The commentary notes that Tamil grammars of war poetry describe a widow joining her husband's severed head to his body and dying with it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arava nuṇ iṭai arakkiyar, kaṇavartam aṟṟa
ciramum aṉṉavai ātaliṉ, vēṟṟumai teriyā
puraviyiṉ talai pūṭkaiyiṉ talai ivai poruttu
karavu il iṉ uyir tuṟantaṉar, kavavuṟat taḻuvi.