கம்பராமாயணம் 7294 · யுத்த 14.236

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆர்ப்பு அடங்கின, வாய் எலாம்; அழல் கொழுந்து ஒழுகப்
பார்ப்பு அடங்கின, கண் எலாம்; பல வகைப் படைகள்
தூர்ப்பு அடங்கின, கை எலாம்; தூளியின் படலைப்
போர்ப்பு அடங்கின உலகு எலாம்; முரசு எலாம் போன.

பொருள் · Meaning in Tamil

முரசு எலாம் போன - முரசங்களின் ஒலிகள் எல்லாம் போயின; வாய் எலாம் ஆர்ப்பு அடங்கின - அரக்கரின் வாய்கள் எல்லாம் ஆரவாரம் அடங்கின; கண் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் - விழிகள் எல்லாம் தீக்கொழுந்து வெளிப்பட, பார்ப்பு அடங்கின - காணும் காட்சியை ஒழிந்தன; கை எலாம் பலவகைப் படைகள் தூர்ப்பு அடங்கின - கைகள் எல்லாம் பலவிதப் படைக்கலங்களைப் பொழிதலை ஒழிந்தன; தூளியின் படலை - தூசிக்கூட்டங்கள்; உலகு எலாம் போர்ப்பு அடங்கின - உலகினையெல்லாம் போர்த்துக் கொள்வதிலிருந்தும் நீக்கம் பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The shouting was stilled in every mouth; the glances that streamed with flame
  2. were stilled in every eye; the showers of many kinds of weapons
  3. were stilled in every hand; the clouds of dust
  4. ceased to shroud the whole world; and all the war drums fell silent.

What the poem says

After Irāmaṉ's slaughter of the demon host, the battlefield falls silent. The demons' war cries stop, their fiery glares go dark, their hands no longer rain weapons, the dust settles, and the drums are heard no more. The repeated 'stilled ... in every' gives the verse its sense of a sudden hush.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārppu aṭaṅkiṉa, vāy elām; aḻaṟ koḻuntu oḻukum
pārppu aṭaṅkiṉa, kaṇ elām; pala vakaip paṭaikaḷ
tūrppu aṭaṅkiṉa, kai elām; tūḷiyiṉ paṭalaip
pōrppu aṭaṅkiṉa ulaku elām; muracu elām pōṉa.