கம்பராமாயணம் 7295 · யுத்த 14.237
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒன்றும் நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை, உருட்டி,
சென்று தீர்வன எனப் பலகோடியும் சிந்தி,
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்பக்,
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம்.
பொருள் · Meaning in Tamil
இராகவன் சரம் எனும் கூற்றம் - இராமபிரானுடைய காலன் போன்ற அம்பு; ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடுந்தலை உருட்டி - இலட்சம் அரக்கருடைய கொடிய தலைகளை அறுத்து உருளச் செய்து; சென்று தீர்வில - அதனோடு முடிந்து விடாமல்; எனைப் பல கோடியும் சிந்தி - (மற்றும்) எத்தனையோ பலகோடி வீரர்களையும் அழித்து; நின்ற தேரொடும் - மீந்து நின்ற தேர் ஒன்றோடும்; இராவணன் ஒருவனும் நிற்க - இராவணன் ஒருவனும் நிற்க - இராவணன் ஒருவனே மிஞ்சி நிற்க; கொன்று வீழ்த்தினது - கொன்றழித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Rolling down a hundred thousand cruel heads,
- and going on without end, scattering many crores more,
- until only Irāvaṇaṉ remained, alone with the chariot he stood on,
- the arrow of Irākavaṉ, that Death, killed and laid them low.
What the poem says
Irāmaṉ's arrow is likened to Death. It strikes off a hundred thousand heads and does not stop there; it destroys countless crores more, until of all that army only Irāvaṇaṉ is left standing, alone in his chariot.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉṟu nūṟṟiṉōṭu āyiram koṭun talai, uruṭṭi,
ceṉṟu tīrvu ila eṉaip pala kōṭiyum cinti,
niṉṟa tēroṭum irāvaṇaṉ oruvaṉum niṟka,
koṉṟu vīḻttiṉatu irākavaṉ caram eṉum kūṟṟam.