கம்பராமாயணம் 7298 · யுத்த 14.240

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முறுவல் எய்திய முகத்தினன் - புன்முறுவல் பூத்த முக மலரினையுடையவனாய்; முளரி அம் கண்ணன் - செந்தாமரை மலரையொத்த அழகிய கண்களையுடைய இராமபிரான்; மறு இலாதது ஓர் வடிக்கணை தொடுத்து - குற்றமற்றதோர் கூரிய அம்பினைப் பூட்டி; உறவாங்கி - (வில்லினை) நன்கு வளைத்து; இறுதிநாள் கால்பொர - உகாந்தகாலக் காற்று வீசும்போது; மந்தரம் - மந்தரமலை; இடையிட்டு அறுவது ஆம் என - இடையிலே இற்று ஒடிவது போல; இராவணன் சிலையினை அறுத்தான் - இராவணனுடைய வில்லினை அறுத்து வீழ்த்தினான்.

முறுவல் எய்திய முகத்தினனாய் இராமன் நிகழ்த்தியபோர் "அலகிலா விளையாட்டு உடையான் (கம்ப./) என்பதன் அரும்பொருளை உணர்த்தியது. பிராட்டியின் கூற்றிலும், (5188) இராவணன் மாலியவானிடம் கூறிய கூற்றிலும் (7258) இந்நிலை அறிக

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a smile upon his face, the lotus-eyed one
  2. fitted a flawless, sharpened arrow and drew it full,
  3. and as Mantaram might snap in the middle when the wind strikes it
  4. on the day of the world's end, so he cut Irāvaṇaṉ's bow in two.

What the poem says

Wounded, Irāmaṉ only smiles. He fits a sharp arrow and cuts Irāvaṇaṉ's bow in half, as the great mountain Mantaram might snap when the winds of the final dissolution strike it.

The smile recalls the poem's opening description of the Lord as one whose sport is without limit: for him even this war is a kind of play.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟuval eytiya mukattiṉaṉ, muḷari am kaṇṇaṉ,
maṟu ilātatu ōr vaṭik kaṇai toṭuttu, uṟa vāṅki,
iṟuti eytum nāḷ, kāl pora, mantaram iṭaiyiṭṭu
aṟuvatu ām eṉa, irāvaṇaṉ cilaiyiṉai aṟuttāṉ.