கம்பராமாயணம் 730 · பால 11.21

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தள் அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானைப், பரதன் எனும் பெயரானை,
எள் அரிய குணத்தாலும் எழிலாலும், இவ் இருந்த
வள்ளலை ஏ அனையானைக், கேகயர் கோன் மகள் பயந்தாள்.'

பொருள் · Meaning in Tamil

தள்ள அரிய - (அறிந்தவர்களால்) விலக்கமுடியாத; பெரு நீதி - சிறந்த நீதிகளாகிய; தனி ஆறு - ஒப்பில்லாத பெருநதிகள்; புக - (தன்னிடம்) வந்து சேர்வதால்; மண்டும் - நிறைந்துள்ள; பள்ளம் எனும் - ஆழமான கடலென்று சொல்லத்தக்க; தகையானை - நல்ல பண்புகளைக் கொண்டவனும்; எள்ள அரிய - (யாராலும்) இகழமுடியாத; குணத்தாலும் - நற்குணங்களாலும்; எழிலாலும் - அழகாலும்; இவ் இருந்த - இங்கே அமர்ந்துள்ள; வள்ளலையே - இந்த இராமனையே; அனையானை - ஒத்தவனுமாகிய; பரதன் என்னும் பெயரானை - பரதன் என்னும் பெயருள்ள குமாரனை; கேகயர்கோன் மகள் - கேகய நாட்டு மன்னன் மகளான கைகேயி; பயந்தாள் - பெற்றெடுத்தாள்.

தமக்குத் தாடகை முதலியோரால் நிகழ்ந்த துன்பத்தைப் போக்கி இன்பம் தந்தமையால் இராமனை விசுவாமித்திரன் வள்ளல் என்றான். நீதியாறுபுக மண்டும் பள்ளம் ஆற்று நீர் நிறைந்த கடல்போல் நீதி நிரம்பினவன் எனலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Him who is like the deep into which the peerless rivers of great, unswerving justice
  2. rush and pour, him whose name is Paratan,
  3. who in flawless virtue and in beauty
  4. is like this generous one sitting here — him the daughter of the Kēkaya king bore.'

What the poem says

Kaikēyi, daughter of the king of Kēkaya, gives birth to Paratan, in whom all the great streams of justice gather as rivers flow into the sea. In virtue and beauty he is the very likeness of Irāmaṉ, "the generous one sitting here", so called because he relieved Vicuvāmittiraṉ of the troubles caused by Tāṭakai and the demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'taḷḷa ariya peru nītit taṉi āṟu puka maṇṭum
paḷḷam eṉum takaiyāṉaip, parataṉ eṉum peyarāṉai,
eḷḷa ariya kuṇattālum eḻilālum, iv irunta
vaḷḷalaiyē aṉaiyāṉaik, kēkēyarkōṉ makaḷ payantāḷ.'