கம்பராமாயணம் 731 · பால 11.22

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரு வலிய - (பிறரால் வெல்லுதற்கு) அரிய வலிமையுடைய; திறலினர் ஆய் - வெற்றியுடையவர்களாய்; அறம் கெடுக்கும் - தருமத்தை அழிக்கின்ற; விறல் - வன்மைமிக்க; அரக்கர் - இராக்கதர்கள் எல்லோரும்; வெருவரு - அஞ்சத்தக்க; திண் திறலார்கள் - மிக்க வலிமையுடையவர்களும்; செம்பொன் பருவரையும் - சிவந்த பொன்மயமான பெரிய மேரு மலையும்; நெடுவெள்ளிப் பருப்பதமும் - வெள்ளிமயமான உயர்ந்த கைலாய மலையும்; வில் ஏந்தும் எனின் - (கையில் தனித்தனியே) வில்லை எடுத்து நிற்குமாயின்; போல்வார்கள் - (அவற்றை) ஒப்பவர்களுமாகிய; இருவரையும் - (இலக்குமணன், சத்துருக்கனன் என்னும்) இரண்டு மைந்தர்களையும்; இவ் இருவர்க்கு - (கோசலை, கைகேயி ஆகிய) இரண்டு மனைவியர்க்கும்; இளையாளும் - இளையவளாகிய சுமித்திரையும்; ஈன்று எடுத்தாள் - பெற்றெடுத்தாள்.

இலக்குவன் பொன்னிறத்தவன்; சத்துருக்கனன் வெண்ணிறத்தவன்; இருவரும் வில் ஏந்தும் வீரர் ஆதலால் அவர்க்கு முறையே மேரு மலையும், கைலாய மலையும் உவமையாகக் கூறப்பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Two of rare might and victory, of firm strength that strikes fear
  2. into the mighty demons who destroy dharma, who, if the great mountain of red gold
  3. and the tall silver mountain were to take up bows, would be like them —
  4. those two the youngest of these two queens bore.'

What the poem says

Cumittirai, the youngest queen, gives birth to twins, Ilakkuvaṉ and Catturukkaṉaṉ, mighty heroes whom the demons will dread. If golden Mount Meru and silver Mount Kailāsa were to take up bows, they would look like these two: Ilakkuvaṉ is golden-skinned and Catturukkaṉaṉ fair.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aru valiya tiṟaliṉar āy, aṟam keṭukkum viṟal arakkar
veruvaru tiṇ tiṟalārkaḷ, vil ēntum eṉil cem poṉ
paru varaiyum neṭu veḷḷip paruppatamum pōlvārkaḷ
iruvaraiyum, iv iruvarkku iḷaiyāḷum īṉṟu eṭuttāḷ.'