கம்பராமாயணம் 732 · பால 11.23

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மறை நான்கும் அனையார்கள் - நான்கு வேதங்களையும் ஒத்துள்ள அந்தக் குமாரர் நால்வரும், தலையாய - முதன்மையான; பேருணர்வின் - செய்திகளையெல்லாம் அறியக் கூடிய முதிர்ந்த அறிவில்; கலை மகட்குத் தலைவராய் - கலைமகளுக்கும் மேம்பட்டவராய்; சிலை ஆயும் - வில் திறத்தை ஆராய்ந்து கூறுவதான; தனுவேதம் - தனுர் வேதமானது; தெவ்வரைப் போல் பணி செய்ய - (தம்முடைய) பகைவர் (தோற்றுத் தம்மிடம் குற்றேவல் செய்வது) போலத் தமக்குக் குற்றேவல் செய்யுமாறு; கலை ஆழிக் கதிர்த் திங்கள் - கலைகள் நிறைந்த வட்டவடிவமான ஒளியையுடைய முழு நிலவின்; உதயத்தில் கலித்து - உதய காலத்தில் ஒலித்து; ஓங்கும் - பொங்குகின்ற; அலை ஆழியென - அலைகளையுடைய கடல்கள் போல; வளர்ந்தார் - வளர்ந்து வந்தார்கள்.

மறை நான்கும் அனையார்கள் - அறம் முதலான நாற்பொருட் பயன்களையும் அளிக்கும் தன்மையர் எனலாம். தம் ஆசிரியர் முன்னிலையில் தம் அறிவாகிய அலைகள் பொங்கிக் காணக் கலைப் பயிற்சி பெற்று அக்குமாரர் வளர்ந்தனர் என்பதைத் திங்கள் உதயத்தில் கலித்தோங்கும் அலையாழி என்னும் தொடரால் குறித்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Becoming masters even of the goddess of learning in supreme understanding,
  2. while the science of archery that studies the bow served them as their enemies would,
  3. like the wave-tossed ocean that swells and roars at the rising of the full bright moon,
  4. they grew — those four, who were like the four Vedas.'

What the poem says

The four princes, like the four Vedas, grow up surpassing even Sarasvatī, goddess of learning, in knowledge. The science of archery waits on them like a conquered enemy waiting on its victor.

They grow like the sea swelling at moonrise: the commentary explains that in the presence of their teachers their learning surged like waves rising to the full moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'talai āya pēr uṇarviṉ kalaimakaṭkut talaivar āyc,
cilai āyum taṉu vētam tevvaraippōl paṇi ceyyak,
kalai āḻik katirt tiṅkaḷ utayattil, kalittu ōṅkum
alai āḻi eṉa, vaḷarntār, maṟai nāṉkum aṉaiyārkaḷ.'