கம்பராமாயணம் 7300 · யுத்த 14.242

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மற்றும் வெம்படை வாங்கினன் வழங்குறா முன்னம்,
அற்று அழிந்து உக அயில் நெடுங் கணைகளால் அறுத்தான்;
கொற்ற வெண்குடை கொடியொடுந் துணிபடக் குறைத்தான்;
கற்றை அம் சுடர்க் கவசமும் கட்டு அறக் கழித்தான்

பொருள் · Meaning in Tamil

மற்றும் - மேலும்; வெம்படை வாங்கினன் - (இராவணன் (வேறொரு) கொடிய ஆயுதம் எடுத்து; வழங்குறா முன்னம் - விடுதற்கு முன்பேயே; இற்று இடையற அவிந்து உக - அது இடையிலேயே முழுதும் சிதைந்து விழுமாறு; எரிகணை எய்தான் - எரிகின்ற அம்பு ஒன்றினை (இராமபிரான் எய்தான்; கொற்ற வெண்குடை - (மேலும் அம்புகளால்) வெற்றிக் குடை; கொடியொடும் துணிபட - (தன் கொடியோடு துண்டிக்குமாறு; குறைத்தான் - வெட்டினான்; கற்றை அம் சுடர்க் கவசமும் - அழகிய ஒளிமிக உமிழும் கவசத்தையும்; கட்டு அற அழித்தான் - பூட்டு அற்று விழுமாறு சிதைத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He took up yet another cruel weapon; but before he could hurl it,
  2. he shot a fiery arrow so that it broke in the middle, crumbled and fell;
  3. he cut down the white parasol of victory together with the banner;
  4. and he struck off the bright, close-wrought armour, its fastenings severed.

What the poem says

Irāmaṉ strips Irāvaṇaṉ of his weapons and his royal emblems one by one. A new weapon is shattered before it can be thrown; the white parasol, sign of kingship and victory, falls with his banner; and his shining armour drops away, its fastenings cut.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟum vem paṭai vāṅkiṉaṉ vaḻaṅkuṟāmuṉṉam,
iṟṟu avintu uka eri kaṇai iṭai aṟa eytāṉ;
koṟṟa veṇkuṭai koṭiyoṭum tuṇipaṭak kuṟaittāṉ;
kaṟṟai am cuṭark kavacamum kaṭṭu aṟak kaḻittāṉ