கம்பராமாயணம் 7302 · யுத்த 14.244
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வயக் கடுஞ் சுடர்க்கணை படும் பொழுதின் - வெற்றிக்குரிய கடிய ஒளிவீசும் இராமபிரானுடைய அம்பு பட்டபொழுது; செறிந்த பன்மணி - (மகுடத்தில்) பதிக்கப் பெற்றிருந்த பல மாணிக்கங்கள்; பெருவனம் - (என்னும்) பெருந்திரள்; பொறிந்த வாய் திசை பரந்து எரிய - திசைகள் தோறும் பரவி எரிவது போன்று ஒளிசிந்தி வீழ்ந்தனவாக, எறிந்தகால் பொர - வீசியடித்த வாயு மோதியபோது; மேருவின் கொடுமுடி - மேரு மலையின் உயர்ந்த சிகரமானது; இடிந்து மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது - உடைந்து மடங்கி (கடலில்) விழுந்ததையும் போன்றது; அவ்வரக்கன் தன் மகுடம் - அந்த இராவணனுடைய மகுடம்.
வாயுவுக்கும் மேருமலைக்கும் இடையே நிகழ்ந்த பலப் போட்டியில், வாயு, மேருவின் ஒரு சிகரத்தைப் பிய்த்துக் கடலில் எறிந்தது. அதுவே இலங்கையாயிற்று என்பது புராண மரபு. ஆதலின், இராவணன் மகுடம் கடலில் வீழ்ந்ததற்கு, மேருவின் சிகரம் கடலில் வீழ்ந்ததனை உவமையாக்கினார். இதனை (கம்ப. 4763) கடல் தாவு படலத்தும் குறித்தார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The many crowded gems spread blazing like a great forest in every direction,
- sparks flying, as the fierce, bright, victorious arrow struck;
- and like the lofty peak of Mēru when the hurled wind battered it, broke
- and toppled and fell — so fell that demon's crown.
What the poem says
Irāmaṉ's arrow strikes Irāvaṇaṉ's crown; its countless gems scatter fire in every direction and the crown falls. The poet compares it to a legend: in a contest of strength the Wind tore a peak from Mēru and flung it into the sea, and that peak became the island of Ilaṅkai. So the fall of Irāvaṇaṉ's crown into the sea mirrors the fall of Mēru's peak, the very ground of his kingdom.