கம்பராமாயணம் 7304 · யுத்த 14.246

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்டர் நாயகன் - தேவர் கோனாகிய இராமபிரானுடைய, அடுசிலை உதைத்த பேர் அம்பு - கொல்லும் வில்லானது விடுத்த பெருமைக்குரிய இராம பாணம்; கொண்டு போகப் போய் - உந்திச் சென்றதனால் சென்று; குரை கடல் குளித்த அக்கொள்கை - (அம்மகுடம்) ஒலிக்கும் கடலில் அழுந்திய அத்தன்மை; மண்டலம் தொடர் - வட்ட வடிவம் பொருந்திய; வயங்கு வெங்கதிரவன் - ஒளிமிகும் வெய்ய கதிர்களையுடைய சூரியன்; தன்னை உண்ட - தன்னை விழுங்கிய; கோளொடும் ஒலிகடல் வீழ்ந்ததும் ஒக்கும் - கேது என்னும் கோளோடு ஒலி கடலில் வீழ்ந்ததையும் ஒக்கும்.

சூரியன் கிரகணம் பற்றிய நிலையில் கடலிடை மறைவதும் உண்டாதலின், இராமபாணம் தூக்கச் சென்ற இராவணன் மகுடம் கடலில் வீழ்ந்து மறைவது அதற்கு உவமையாயிற்று. இராவணன் மகுடம் சூரியனுக்கும், இராம சரம் கேது எனும் செம்பாம்பிற்கும் உவமைகள் ஆயின. தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Carried off by the great arrow that the slaying bow of the Lord of the gods had sent forth,
  2. the way that crown went and plunged into the roaring sea
  3. was like the blazing, scorching sun that runs its circling course
  4. falling into the loud sea along with the planet that had swallowed it.

What the poem says

Irāvaṇaṉ's crown, carried away by Irāmaṉ's arrow, sinks into the sea. The poet likens it to the sun at an eclipse, swallowed by the shadow planet Kētu, the red serpent, and sinking with it below the sea's horizon. The crown is the sun and Irāmaṉ's arrow the eclipsing serpent.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṭar nāyakaṉ aṭu cilai utaitta pēr ampu
koṇṭu pōkap pōyk kurai kaṭal kuḷitta ak koḷkai
maṇṭalam toṭar vayaṅku veṅ katiravaṉ, taṉṉai
uṇṭa kōḷoṭum oli kaṭal vīḻntatum okkum.