கம்பராமாயணம் 7309 · யுத்த 14.251
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறத்தினால் அன்றி - (இராமபிரான் இராவணனை நோக்கி) அறநெறியினால் அல்லாமல், மறத்தினால் - பாவ நெறியினால்; அருஞ்சமர் கடத்தல் - அரிய போர்களில் வெல்லுதல்; அமரர்க்கும் அரிது - தேவர்களுக்கும் இயலாததாகும்; என்பது - என்பதனை; மனத்திடை வலித்தி - உள்ளத்திலே உறுதியாகப் பதித்துக் கொள்க; பாவி! - பாவச் செயல்கள் புரிந்தவனே!; கிளையொடும் நின் நெடும் பதிபுக - உன் சுற்றத்தாரொடும் பெரிய ஊருக்குட் செல்ல; பறத்தி- விரைகிறாய்; இறத்தி - நீ இப்போது இறப்பாய்; தனிமை கண்டிரங்கி யான் அது நினைக்கிலென் - நிராயுதபாணியாக நிற்கும் அவலம் கண்டு இரங்கி உன்னைக் கொல்வதனை நான் நினைக்க வில்லை.
எதிரிக்கு ஒரு துன்பம் வந்தவிடத்து, தக்க சமயம் வந்தது என்று அவனைக் கொல்லாது உபகாரம் செய்து உயிருடன் அனுப்புதல் பேராண்மை என்பதாகும். "பேராண்மை என்பதறுகண் ஒன்று உற்றக்கால், ஊராண்மை மற்றதன் எஃகு” என்ற குறளும் (773) அதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையும் இங்கும் பின்னும் (7271) நினைக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Except by righteousness, to win a hard battle, even for the immortals,
- by wickedness is hard': fix this firmly in your mind;
- you are in haste to fly into your great city with your kin, sinner!
- You would die now; but I do not intend it, pitying you left alone.'
What the poem says
Irāmaṉ addresses Irāvaṇaṉ. No one, not even a god, wins a hard battle through wrongdoing; only righteousness wins. He could kill him now, but out of pity for a man left alone and unarmed he will not.
The commentary cites the Tirukkuṟaḷ: courage is fierceness in battle, but its sharp edge is helping a foe who has fallen into trouble.