கம்பராமாயணம் 7310 · யுத்த 14.252

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘உடைப் பெருங் குலத்தினரொடும் உறவொடும்; உதவும்
படைக்கலங்களும், மற்று நீ தேடிய பலவும்,
அடைத்து வைத்தன திறந்து கொண்டு, ஆற்றுதி ஆயின்,
கிடைத்தி; அல்லையேல், ஒளித்தியால்; சிறுதொழில் கீழோய்!

பொருள் · Meaning in Tamil

சிறுதொழில் கீழோய் - இழிசெயல்கள் புரியும் கீழ்மகனே!; உடைப் பெருங் குலத்தினரொடும் - உன்னுடைய பேரினத்தவரோடும்; உறவொடும் - சுற்றத்தாரோடும்; உதவும் படைக்கலங்களும் - (உனக்கு இனி) உதவவல்ல படைக்கருவிகளையும்; மற்றும் நீ தேடிய பலவும் - மற்றும் நீ தேடிப் பல இடங்களில் வைத்துள்ள சேனைகளையும்; அடைத்து வைத்தன திறந்து கொண்டு - நகரின் உள்ளே அடக்கி வைத்துள்ள உன் பலப்பொருள்கள் யாவற்றையும் திறந்து கூட்டிக்கொண்டு; ஆற்றுதியாயின் - போர் புரியும் ஆற்றல் உடையவன் நீயானால்; கிடைத்தி - (போர்க்கு வந்து) கிட்டுவாயாக; அல்லையேல் ஒளித்தி - உனக்கு அந்த ஆற்றல் இல்லையாயின் கோட்டைக்குள் ஒளிந்து கொள்; (என்றான் இராமபிரான்.

பிறர் மனை நயத்தல் முதலிய புன் செயல் புரிந்தமையால் இராவணனை, சிறு தொழிற் கீழோய்! என்றார். "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி" (குறள். 137) என்பர் வள்ளுவப் பெருந்தகை. "அறவையாயின் நினது எனத்திறத்தல்; மறவையாயின் போரொடு திறத்தல்" (புறம். 44) என்னும் புறப்பாடல் அடிகள் கவிஞர்க்கு இங்கு நினைவு வந்திருத்தல் வேண்டும் குலத்தினர்- அரக்க இனத்தினர். உறவு-தம்பி, மக்கள் முதலியோர்; படைக்கலங்கள் - வில், வேல், ஈட்டி, தோமரம் முதலியவை. மற்றும் நீ தேடிய பலவும் என்றது - தேர் முதலிய நால்வகைப் படைகளையும் மூலபலப் படை முதலியவற்றையும், "ஆற்றுதியாயின் கிடைத்தி; அல்லையேல் ஒளித்தி” - சந்த நயம் சுவைத்து மகிழ்க. தறுகண்மை, இசைமை அடியாகப் பிறந்த பெரு மிதத்தைச் சார்ந்தன இராமனது உரைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'With the great clan that is yours and with your kin, with the weapons
  2. that will serve you, and the many other things you have amassed,
  3. opening up all that you have shut away, if you have the strength,
  4. come and meet me; if not, go and hide, base doer of petty deeds!'

What the poem says

Irāmaṉ continues. Let Irāvaṇaṉ gather his whole clan and family, every weapon and every army he has stored inside the city, and come back to fight if he dares; otherwise let him hide. He calls him base for the petty crime of desiring another man's wife.

The commentary hears an echo of an old Puṟanāṉūṟu poem: if you are righteous, open your gates in submission; if you are brave, open them to fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uṭaip peruṅ kulattiṉaroṭum uṟavoṭum; utavum
paṭaikkalaṅkaḷum, maṟṟum nī tēṭiya palavum,
aṭaittu vaittaṉa tiṟantukoṇṭu, āṟṟutiāyiṉ,
kiṭaitti; allaiyēl, oḷittiyāl; ciṟu toḻil kīḻōy!