கம்பராமாயணம் 7311 · யுத்த 14.253

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிறையில் வைத்தவள் தன்னை விட்டு - உன்னால் சிறை வைக்கப்பட்டுள்ள சீதாதேவியினை விடுதலை செய்து; நின் தம்பியை - உனக்குப் பின் பிறந்தவனான தம்பி வீடணனை; உலகினில் தேவர் முறையில் வைத்து - உலகின் கண் தேவராகிய அந்தணர் தகுதியில் வைத்து; இராக்கதர் முதல் பேர் இறையில் வைத்து - இராக்கதர்க்கு முதல்வனாகும் பேரரசப் பதவியில் வைத்து; அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் - அவ்வீடணனுக்கு ஏவல் பணிபுரிந்து இருப்பாயானால்; இன்னும் - (இப்போது மட்டுமன்றி) இனிமேலும்; நின்தலை வாளியின் தடிந்து - உன்னுடைய தலையை (என்) அம்பால் துண்டித்து; தரையில் வைக்கிலென் - தரையின் மேல் வைக்க மாட்டேன்.

இதுவும் தறுகண்மையால் வந்த பெருமிதம். உலகினில் தேவர் - பூசுரர் எனப்படும் அந்தணர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you release her whom you hold captive, and your younger brother, who stands
  2. in the rank of the gods of the earth, you set as the first and high
  3. lord of the demons, and live serving him at his command, then even now
  4. I will not cut off your head with my arrow and lay it on the ground.'

What the poem says

Irāmaṉ offers terms even now. If Irāvaṇaṉ frees Cītai, crowns his virtuous younger brother Vīṭaṇaṉ as king of the demons, and lives as his servant, Irāmaṉ will spare his life. The 'gods of the earth' are the brahmins, among whom Vīṭaṇaṉ's goodness gives him a place.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ciṟaiyil vaittavaḷtaṉṉai viṭṭu ulakiṉil tēvar
muṟaiyil vaitta niṉ tampiyai irākkatar mutal pēr
iṟaiyil vaittu avaṟku ēval ceytu iruttiyēl, iṉṉum
taraiyil vaikkileṉ, niṉ talai vāḷiyiṉ taṭintu.