கம்பராமாயணம் 7312 · யுத்த 14.254

Section யுத்த காண்டம் / 14. முதற் போர் புரி படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
“

பொருள் · Meaning in Tamil

அல்லையாம் எனின் - (நான் மேலே கூறிய வண்ணம் செய்ய) விரும்பவில்லையெனில், ஆர் அமர் ஏற்று நின்று - அரிய போரை மேற்கொண்டு; ஆற்றவல்லையாம் எனில் - போர்புரிய வல்லமையுடையாய் என்றால்; உனக்கு உள வலி எலாம் கொண்டு - உனக்கு உள்ள ஆற்றல் அனைத்தையும் மேற்கொண்டு, நில் ஐயா என - 'எதிர்த்து நில் ஐயா' என்று (என்னிடம்) கூறி; நேர்நின்று பொன்றுதி - என் எதிரே நின்று போரிட்டு ஒழிவாயாக; எனினும் - அவ்வாறு போரிட்டு ஒழிந்தாய் ஆயினும், நல்லை ஆகுதி - நல்லவன் ஆவாய்; இனிப் பிழைப்பு உண்டு என நயவேல் - (ஆனால்) இனி, (போர்புரிந்து) பிழைத்துக் கொள்ளலாம் என்று மட்டும் விரும்பி நில்லாதே.

தன் எதிரே நின்று பொருது அழிந்தாலும் வீரருக்குரிய துறக்கமும், வீரன் என்ற பொன்றாப் புகழும் கிடைக்குமாதலின் "பொன்றுதி எனினும் நல்லை ஆகுதி" என்றான். வெற்றியும் தோல்வியும் வீரர்க்கு மாறி மாறி வரும் இயல்பினவாதலின், இப்பொழுது தோற்ற நான் இலங்கைக்குட் சென்று, மீண்டும் படையொடு வந்து வெல்வேன் என்பதை மட்டும் மனத்தில் நயக்காதே; நீ மாள்வது உறுதி எனப் பெருமான் தெளிவுறுத்தியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If you will not, then if, taking up the hard battle and standing firm, you
  2. have the power to fight, gather all the strength you have,
  3. say, "Stand, sir!" and face me and die; even so
  4. you will be counted good; but do not hope, "There is escape for me yet."'

What the poem says

Irāmaṉ ends his speech. If Irāvaṇaṉ refuses these terms, let him come back with all his strength, face Irāmaṉ squarely and die fighting; a warrior's death would at least win him heaven and lasting fame. But he must not imagine that he can retreat now, regroup and win later: his death is certain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘allaiyām eṉiṉ, ār amar ēṟṟu niṉṟu āṟṟa
vallaiyāmeṉiṉ, uṉakku uḷa vali elām koṇṭu,
“nil, aiyā! “ eṉa nēr niṉṟu poṉṟuti; eṉiṉum,
nallai ākuti; “piḻaippu iṉi uṇṭu “ eṉa nayavēl.