கம்பராமாயணம் 7314 · யுத்த 15.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாரணம் பொருதமார்பும் - திசையானைகளின் எதிர் சென்று போரிட்டுத் தந்தங்கள் துளைத்த மார்பும்; வரையினை எடுத்த தோளும் - கைலாயமலையை அள்ளி எடுத்த வலிமிகு தோளும்; நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த நாவும் - நாரத முனிவன் நன்று நன்று என்று ஏற்குமாறு சாமவேதத்தை இசைநயத்தோடு பாடிய நாவும்; தாரணி மெளலி பத்தும் - பத்துத் தலைகளிலணிந்திருந்த மாலையணிந்த அரசச் சின்னமான மணிமுடி பத்தும்; சங்கரன் கொடுத்த வாளும் - சிவபிரான் தவஆற்றல் கண்டு கொடுத்த வாளும்; வீரமும் களத்தே போட்டு - தன்னிடம் என்றும் நீங்காமல் இருந்த வீரப் பண்பினையும் போர்க்களத்திலே போட்டு விட்டு; வெறுங்கையே மீண்டு போனான் - தன்னிடமிருந்த பிறிதின் கிழமைப் பொருள்களையும் தற்கிழமையாய உறுப்பு, குணம் ஆகியவற்றையும் இழந்து வெறுங்கையனாய் இலங்கை நகருக்கு மீண்டும் போனான்.
மார்பும் தோளும் நாவும் வீரமும் இராவணனிடம் இருந்த தற்கிழமைப் பொருள்கள். இப்பொருள்களை எந்நிலையிலும் எங்கும் போட்டு விடமுடியாது. இங்குக்கவிஞர் வீரமிழந்த இராவணன் பெற்ற முதல் தோல்வியின் பாதிப்பு அவனை எந்த அளவு பாதித்துள்ளது என்ற நுண் பொருளை விளக்குவதற்காக நுண்பொருளாகிய வீரம், பருப்பொருள்களான மார்பு தோள் நா ஆகியவற்றின் துணைகொண்டு கவிதையை அமைத்துள்ளார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The chest that had fought the elephants of the quarters, the shoulders that had lifted the mountain,
- the tongue that had sung so finely that the sage Nāratar approved,
- the ten garlanded crowns, the sword that Caṅkaraṉ had given,
- and his valour too he left lying on the field, and went back empty-handed.
What the poem says
The first verse of the chapter on the killing of Kumpakaruṇaṉ. Irāvaṇaṉ returns to Ilaṅkai after his defeat. The poet lists his glories: the chest scarred by the tusks of the elephants that guard the directions, the arms that lifted Kailāsa, the tongue that sang the Sāma Veda to the sage Nārada's delight, his ten crowns, the sword Śiva gave him, and his valour.
He left them all on the battlefield. Crowns and a sword can be lost, but not a chest or a tongue; by listing them together the poet shows how completely the defeat has broken him.