கம்பராமாயணம் 7317 · யுத்த 15.4

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு - ஒன்பது கோள்களையும் ஒருங்கே சிறைவைத்து அடிமைப்படுத்தி ஆண்ட வெற்றி வீரனான இராவணனுக்கு; அற்றை நாள் - தோற்றுத் திரும்பிய அந்த நாளில்; நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் - பகலில் ஒருசேர மலர்ந்த தாமரை மலர் போன்ற முகத்தினையுடைய மகளிரது; நயனம் எல்லாம் வாள் ஒத்த - கண்கள் எல்லாம் வாட்படை போல் துன்பத்தை மிகுவித்தன; மைந்தர் வார்த்தை - மக்களுடைய சொற்கள்; இராகவன் வாளி ஒத்த - இரகுகுல நாயகனின் அம்பு போல் துன்பம் தந்தன; இதற்கு காரணம் என்னையோ எனின், தோள் ஒத்த துணை மென் கொங்கை - தோள் வலிக்குச் சார்ந்த மார்பில் அமைந்த இரட்டை மென் கொங்கைகளையுடைய வெற்றித் தெய்வமாகிய கொற்றவையின்; நோக்கு அங்குத் தொடர்கிலாமை - வெற்றி நோக்கு அவனிடத்தில் இதுவரை தொடர்ந்து இப்போது தொடர்கிலாமையேயாகும்.

கொற்றவையின் வெற்றி நோக்கால் இதுவரை முக்கணான் முதலினோரைப் புக்க போரெல்லாம் வென்று நின்ற இராவணன் தாயினும் தொழத்தக்காள் மேல் தங்கிய காதல் நோயாலும், இராகவன் முனிவாலும் அவ்வெற்றி நோக்கை இழந்ததை ஆசிரியர் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The eyes of the women whose faces were like lotuses at day's rising
  2. were like swords; the words of his sons were like Irākavaṉ's arrows;
  3. for the conqueror who had kept even the planets in prison and ruled, on that day
  4. the gaze of her of the soft paired breasts, worthy of his shoulders, no longer followed him.

What the poem says

Irāvaṇaṉ had once imprisoned even the nine planets. Now the looks of the women cut him like swords, and his sons' words wound him like Irāmaṉ's arrows. The reason, says the poet, is that the favouring gaze of Koṟṟavai, the goddess of victory, has turned away from him.

Victory had always been with him, even against Śiva; he has lost it through his lust for Cītai, a woman worthy of more reverence than his own mother, and through Irāmaṉ's anger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāḷ otta naḷiṉam aṉṉa mukattiyar nayaṉam ellām
vāḷ otta; maintar vārttai irākavaṉ vāḷi otta;
kōḷ otta ciṟai vaittu āṇṭa koṟṟavaṟku, aṟṟaināḷ taṉ
tōḷ otta tuṇai meṉ koṅkai nōkku aṅkut toṭarkilāmai.