கம்பராமாயணம் 7318 · யுத்த 15.5

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மந்திரச் சுற்றத்தாரும்,வாணுதல் சுற்றத்தாரும்
தந்திரச் சுற்றத்தாரும்,தன்கிளைச் சுற்றத்தாரும்,
எந்திரப் பொறியின் நிற்ப,யாவரும் இன்றி, தானே
சிந்துரக் களிறு கூடம்புக்கென, கோயில் சேர்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

மந்திரச் சுற்றத்தாரும் - அடுக்கு மீது அடாதது என உரைக்கும் மந்திரத் துணையானவர்களும்; வாணுதல் சுற்றத்தாரும் - ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவியரும், தந்திரச் சுற்றத்தாரும் - சேனைத்தலைவர்களாகிய துணைவரும்; தன் கிளைச் சுற்றத்தாரும் - உறவு முறையானவர்களும்; எந்திரப் பொறியின் நிற்ப - இதுவரை இராவணனிடம் காணாத தன்மை கண்டதால் இயந்திரத்தின் வன்மையால் இயங்கும் பொறி அவ் இயந்திர வன்மை தீர்ந்தவுடன் செயல் படாது நிற்றல் போல் நிற்க; யாவரும் இன்றி - ஒருவரும் பின் தொடரும் வலிமையின்றி அசையாது நிற்றலால் தனியாக; தான் ஓர் - இராவணன் ஒரு; சிந்துரக் களிறு - செம்பொடியை உடல் முழுதும் அணிந்த ஆண்யானை; கூடம்புக்கென - கொட்டாரம் சென்று சேர்வது போல்; கோயில் சேர்ந்தான் - அரண்மனையின் உட்புறம் சேர்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His circle of counsellors, his circle of bright-browed wives,
  2. his circle of commanders, his circle of kin
  3. stood motionless like machines; and with no one at all, he,
  4. like a vermilion-daubed elephant going into its stall, reached his palace.

What the poem says

No one in Irāvaṇaṉ's court dares to follow him: his ministers, his wives, his generals and his relatives all stand frozen like machines that have run down, astonished to see him as they have never seen him before. Alone, he goes into the inner palace like a great elephant, smeared with red powder, retiring to its stall.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mantirac cuṟṟattārum, vāṇutal cuṟṟattārum
tantirac cuṟṟattārum, taṉ kiḷaic cuṟṟattārum,
entirap poṟiyiṉ niṟpa, yāvarum iṉṟi, tāṉ ōr
cinturak kaḷiṟu kūṭam pukkeṉa, kōyil cērntāṉ.