கம்பராமாயணம் 7322 · யுத்த 15.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முறையில் நின்று ஏவல் செய்வார் - தங்களுக்கு உரிய முறைப்படி இட்ட ஏவலைச் செய்பவர்களாகிய; மூவகை உலகுளோரும் - விண், மண், பாதலம் என்ற மூன்று உலகத்தில் உள்ளவர்களும், பாவகம் இன்னது என்று தெரிகிலர் - இராவணனுடைய மனக்கருத்து இதுவென அறியாதவர்களாகிப்; பதைத்து விம்ம - மனம் வருந்தி அழுது விம்ம; தூ அகலாதவைவாய் எஃகு உறத் - தசை நீங்காத கூரிய வேல் உடலில் ஆழமாகப் பாய்தலால்; தொளைக்கையானை - உட்புழை உடைய கையினையுடைய யானை; சேவகம் அமைந்தது என்ன - யானைக் கூடத்திற்குச் சென்று சேர்ந்தது போல; செறிமலர் அமளி சேர்ந்தான் - மலர் நிறைந்த மலர்ப் படுக்கையில் சேர்ந்தான்.
பாவகம் - மனக்கருத்து. தூ - தசை. சேவகம் - யானைக் கொட்டாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While those of the three worlds, who served him each in their due order,
- not knowing what was in his mind, trembled and sobbed,
- like an elephant with hollow trunk, a sharp spear still crusted with flesh sunk deep in it,
- going back to its stall, he went to his couch thick with flowers.
What the poem says
Those who serve Irāvaṇaṉ from heaven, earth and the netherworld cannot tell what he is thinking and tremble in anxiety. He withdraws to his flower-strewn bed like a wounded elephant, a spear lodged deep in its body, going back to its stall. The wound is his shame.