கம்பராமாயணம் 7323 · யுத்த 15.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பண்நிறை பவளச் செவ்வாய் - இனிய இசை போன்று பேசும் பவளம் போன்ற சிவந்த வாயினையும்; பைந்தொடி சீதை - பைம்பொன்னால் ஆன வளையல்களையும் அணிந்த சீதை; என்னும் பெண் இறை கொண்ட நெஞ்சில் - என்கின்ற பெண் தங்கி இடம் முழுதும் கொண்ட நெஞ்சத்தில்; நாண் நிறை கொண்ட பின்னர் - முதல் நாள் ஏற்பட்ட தோல்வி காரணமாகத் தோன்றிய நாணம் முழுதும் நிரம்பிய பின்னர்; கண் இறை கோடல் செய்யான் - சிறிதும் கண்துயிலாதவனாய்; கையறு கவலை சுற்ற - செயலறவும் கவலையும் சூழ; உள்நிறை மானம் தன்னை - தன் நெஞ்சில் சீதையிருந்த இடத்தில் நிரம்பிய மான உணர்வை; உமிழ்ந்து எரி உயிர்ப்பதானான் - வெளிப்படுத்த விரும்புபவன் போல் நெருப்பென பெருமூச்சு விட்டான்.
கண் இறை கோடல்-கண் சிறிதும் துயிலாமை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When in the heart that the woman Cītai, of coral-red lips full of music and fresh gold bangles,
- had wholly taken as her dwelling, shame too had come and filled it,
- he did not close his eyes even a little; helpless anxiety closed round him,
- and as if to spew out the pride that filled him within, he breathed out fire.
What the poem says
Irāvaṇaṉ lies on his bed but cannot sleep. His heart was already full of Cītai; now shame at his defeat fills it too. Helpless and anxious, he heaves burning sighs, as if trying to breathe out the wounded pride inside him.