கம்பராமாயணம் 7324 · யுத்த 15.11

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ‘

பொருள் · Meaning in Tamil

நெடுவயிரத் தோளான் - வயிரம் போல் உறுதி உள்ள நீண்ட திரள் தோள் இராவணன்; வான் நகும் - தான் வென்று நகைத்த வானவர் சிரிப்பர்; மண்ணும் எல்லாம் நகும் - மண்ணுலக மாந்தரும் பிறரும் சிரிப்பர்; நான்நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று - தான் வென்று சிரித்தற்குரிய பகைவர்களாகிய சிறுதொழில் மனிதர்கள் சிரிப்பர் என்று; அதற்கு நாணான் - எண்ணி அதற்கு நாணப்படாதவனாய்; வேல் நகு நெடுங்கண் - வேலை வென்றிட்ட நீண்ட கண்களையும்; செவ்வாய் - சிவந்த வாயினையும்; மெல் இயல் - மெத்தென்ற சாயலினையும் உடைய; மிதிலை வந்த சானகி நகுவள் - மிதிலையில் தோன்றிய சனகன் மகளாகிய சானகி எள்ளிச் சிரிப்பாள்; என்றே நாணத்தால் சாம்புகின்றான் - என்று எண்ணி எண்ணியே நாணத்தால் வாடினான்.

வான், மண் - இடவாகுபெயர்கள். இராவணனின் நினைவில் சீதையின் கண்ணும் வாயும் சாயலும் தோன்றுவதாகக் கவிஞர் குறிப்பிட்டுள்ளது ஆழ்பொருள் கொண்டதாகும். தன் தோல்வியைக் கண்ணால் பார்த்து வாயால் சிரித்து மெத்தென்ற உடல் சாயல் குலுங்கச் சீதை நகைப்பாளே என்ற எண்ணம் இராவணனது மனதில் தோன்றியதை இக்குறிப்பு உணர்த்தி நிற்கிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Heaven will laugh; the earth and all will laugh,' thought he of the long, diamond-hard shoulders;
  2. 'all the foes I once laughed at will laugh' — at this he felt no shame;
  3. 'the gentle one with long eyes that outshine the spear and red lips, who came from Mitilai,
  4. Cāṉaki will laugh' — at that thought he shrank with shame.

What the poem says

Irāvaṇaṉ imagines who will laugh at his defeat: the gods he conquered, the people of the earth, the enemies he once mocked. None of that troubles him. What crushes him is the thought that Cītai (Cāṉaki, daughter of Caṉakaṉ of Mitilai) will laugh. The poet has him picture her eyes, lips and graceful form, as if he can already see her eyes watching, her mouth laughing and her body shaking with mirth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vāṉ nakum; maṇṇum ellām nakum; ‘ neṭu vayirat tōḷāṉ
‘nāṉ naku pakaiñar ellām nakuvar ‘eṉṟu, ataṟku nāṇāṉ;
‘vēl naku neṭuṅ kaṇ cev vāy mel iyal, mitilai vanta
cāṉaki nakuvaḷ‘ eṉṟē nāṇattāl cāmpukiṉṟāṉ