கம்பராமாயணம் 7327 · யுத்த 15.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கவை உறு நெஞ்சன் - துன்பம் மிகப் பொருந்திய மனத்தையும்; காந்திக் கனல்கின்ற கண்ணன் - நெருப்புப் போல் எரிகின்ற கண்ணினையும்; பத்துச் சிவையின் வாய் என்ன - பத்துத் துருத்திகளின் வாய் போன்று; செந்தீ உயிர்ப்பு உறத் திறந்த மூக்கன் - செந்தீயுடன் பெருமூச்சுக் காற்று வெளிப்படும் விடைத்த பத்து மூக்குகளையும்; நவை அறு பாகை அன்றி - குற்றமில்லாத வெல்லப்பாகையன்றி; அமுதினை நக்கினாலும் - அமுதத்தையே நக்கி உண்டாலும்; சுவை அறப் புலர்ந்த நாவான் - சுவை முழுதும் உறைக்காதவாறு உலர்ந்த நாவினையும் உடையவனான இராவணன்; இனையன சொல்லலுற்றான் - (கீழ்வரும் இத்தகைய சொற்களைக் கூறத் தொடங்கினான்.
கவை-கவ்வை. இடைக்குறை. சிவை - துருத்தி. இராவணனின் சினமும் சோகமும் கலந்து வெளிப்படுமாறு இப்பாடல் அமைந்துள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His heart full of anguish, his eyes blazing and burning, his ten
- nostrils flared, breathing out red fire like the mouths of bellows,
- his tongue so parched that even if he licked not faultless syrup but nectar itself
- it would have tasted nothing, he began to say these words.
What the poem says
Irāvaṇaṉ prepares to answer. His heart is in anguish, his eyes blaze, his ten nostrils snort fire like a smith's bellows, and his tongue is so dry with grief that even nectar would have no taste. The verse mixes his rage and his sorrow.