கம்பராமாயணம் 7328 · யுத்த 15.15

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘சங்கம் வந்து உற்ற கொற்றத்தாபதர் தம்மோடு எம்மோடு
அங்கம் வந்து உற்றது ஆக,அமரர் வந்து உற்றார் அன்றே;
கங்கம் வந்து உற்ற செய்யகளத்து, நம் குலத்துக்கு ஒவ்வாப்
பங்கம் வந்து உற்றது அன்றி,பழியும் வந்து உற்றது என்றான்.

பொருள் · Meaning in Tamil

சங்கம் வந்து உற்ற - தொகுதியாக வானரச் சேனையோடு வந்து சேர்ந்த; கொற்றத் தாபதர்- வெற்றியுடைய தவ வேடத்தையுடைய இராம இலக்குவர்; தம்மோடு எம்மோடு - தமக்கும் எமக்கும்; அங்கம் வந்து உற்றது ஆக - போர் வந்து மூண்டபோது; அமரர் வந்து உற்றார் அன்றே - அப்போரினைக் காணத் தேவர்கள் வந்தார்கள் அல்லவா; கங்கம் வந்து உற்ற செய்ய களத்து - கழுகுகள் பறந்து வந்து நெருங்கிய குருதியால் சிவந்த அப்போர்க்களத்தில்; நம் குலத்துக்கு ஒவ்வாப் பங்கம் வந்து உற்றது அன்றி - நம் அரக்கர் குலத்துக்குப் பொருந்தாத தோல்வி வந்து பொருந்தியது அல்லாமல்; பழியும் வந்து உற்றது - தீராத பழியும் வந்து பொருந்தி விட்டது என்று இராவணன் கூறினான்.

அமரர் வந்து உற்றார் அன்றே - என்ற தொடர் இருவர் போரில் தேவர் ஏன் வந்தனர் என்று நடந்ததை நுண்ணறிவுடன் எண்ணிப் பார்க்கும் இராவணனின் அறிவுத் திறத்தை வெளிப்படுத்துகிறது. எந்நிலையிலும் நுணுக்கமாக நடந்ததை எண்ணிப் பார்க்கும் மனத்திறம் உடையவன் இராவணன். சங்கம்-கூட்டம் கங்கம்-பருந்து அன்று, ஏ-அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When between the victorious ascetics, who came with their gathered host, and us
  2. battle was joined, the immortals came to watch, did they not?
  3. On that red field where the vultures came, a defeat unworthy of our race
  4. has come upon us — and not that alone: disgrace has come as well.'

What the poem says

Irāvaṇaṉ begins his account. When battle was joined with Irāmaṉ and Ilakkuvaṉ, the victorious 'ascetics' in hermits' dress, the gods came down to watch. On that bloody field the demon race has suffered a defeat unworthy of it, and lasting disgrace besides.

The commentary notes his sharpness: even in distress he has asked himself why the gods came to watch a fight between two parties.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘caṅkam vantu uṟṟa koṟṟat tāpatartammōṭu emmōṭu
aṅkam vantu uṟṟatu āka, amarar vantu uṟṟār aṉṟē;
kaṅkam vantu uṟṟa ceyya kaḷattu, nam kulattukku ovvāp
paṅkam vantuṟṟatu aṉṟi, paḻiyum vantuṟṟatu aṉṟē.