கம்பராமாயணம் 7329 · யுத்த 15.16

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நம்ப - குல முதல்வ; முளை அமை திங்கள் சூடும் முக்கணான் - பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய மூன்று கண்களையுடைய சிவபெருமானை; முதல்வன் ஆக - முதலாகக் கொண்டு; கிளை அமை புவனம் மூன்றும் - மேலும் மேலும் வளருந்தன்மை கொண்ட மூன்று உலகத்திலுள்ள மக்களும்; வந்து உடன் கிடைத்த வேனும் - ஒரு சேர வந்து பக்கத் துணையாய் நின்றாலும்; என் பெருஞ்சேனை - என்னுடைய பெரிய படை; வளை அமை வரிவில் வாளி - வளைதல் பொருந்திய கட்டமைந்த வில்லிலிருந்து அம்புகளை; மெய் உற வழங்கும் ஆயின் - உடலில் உறப் பொருந்துமாறு வெளிப்படுத்தினால்; இளையவன் தனக்கும் ஆற்றாது - இளையவனாகிய இலக்குவனின் ஆற்றலுக்கு முன் நிற்க மாட்டாது.

கிளை - மென்மேல் வளர்தல். கிடைத்தவேனும் - பக்கத் துணையாயினும். சங்கரன் கொடுத்த வரமும் வாளும் பெற்றவனாதலால் முக்கணானை ஈண்டு இராவணன் நினைவு கூர்கிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even if, with the three-eyed one who wears the crescent moon at their head,
  2. all the three spreading worlds came and stood beside us together,
  3. once he looses the arrows of his curved and banded bow to strike their bodies,
  4. my great army could not stand even against the younger one, O elder.'

What the poem says

Irāvaṇaṉ admits the scale of the danger. Even if Śiva, the three-eyed god who wears the crescent moon, and all three worlds were on his side, his vast army could not stand up even to Ilakkuvaṉ, the younger brother, once he began to shoot. He thinks of Śiva because it was Śiva who gave him his boons and his sword.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘muḷai amai tiṅkaḷ cūṭum mukkaṇāṉ mutalvaṉ āka,
kiḷai amai puvaṉam mūṉṟum vantu uṭaṉ kiṭaittavēṉum,
vaḷai amai vari vil vāḷi mey uṟa vaḻaṅkumāyiṉ,
iḷaiyavaṉtaṉakkum āṟṟātu, eṉ peruñ cēṉai nampa!