கம்பராமாயணம் 7330 · யுத்த 15.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எறித்த போர் அரக்கர் ஆவி - தன் மேல் படைக் கலங்களை எறிந்த போரில் வல்ல அரக்கரது உயிரினை; எண் இலா வெள்ளம் எஞ்சப் பறித்த போது - எண்ணிக்கையில் அடங்காத வெள்ளத்தவரில் ஒருவரும் எஞ்சி நிற்காமல் கவர்ந்த போதும்; என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப் பொறித்த போது - எனக்கு இப்படிப்பட்ட அவமானம் முதுகில் தங்கும்படி அம்புகளைப் பதித்த போது; அன்னான் - அந்த இராமனிடம்; அந்தக் கூனி கூன் போக உண்டை தெறித்த போது - சிறு வயதில் கூனியின் கூன் போக வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு மண்ணுருண்டைகளை அடித்தபோது; ஒத்ததன்றி - இருந்த விளையாட்டு மனநிலையை ஒத்த மனநிலை அன்றி; சினம் உண்மை தெரிந்தது இல்லை - சினம் இருத்த நிலை தெரியவில்லை.
இத்தோல்வித் துன்பத்தை என் முதுகில் தங்கும்படி இராமன் செய்தான் என்பது பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When the lives of the demons who hurled their weapons in war, countless floods of them, leaving none,
- he tore away; when, so that this disgrace would cling to my back,
- he branded me — it was just like that day when, so the hunchback's hump might go, a clay pellet
- he flicked at her; no more than that: no anger could be seen in him.'
What the poem says
Irāvaṇaṉ marvels at Irāmaṉ's calm. When Irāmaṉ wiped out whole hosts of demons and heaped this shame on Irāvaṇaṉ, it was as easy and as free of anger as the boyhood prank he once played on the hunchbacked maid Kūṉi, flicking clay pellets at her hump. That old prank is said to have made Kūṉi bear a grudge, which led to Irāmaṉ's exile.