கம்பராமாயணம் 7331 · யுத்த 15.18

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மலை உறப் பெரியர் ஆய - மலையை மாறுபட்டுப் பெரிய உடலினை உடைய; வாள் எயிற்று அரக்கர் தானை - கூர்மையான பற்களை உடைய அரக்கரது சேனை; நிலை உறச் செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும் - இராமனை நிலையாக நெருங்கி நின்றவை நூற்று இரண்டு வெள்ளம் எனினும்; நேரே குலை உறக்குளித்த வாளி - அவனால் நேராகக் குறி தவறாமல் செலுத்தப்பட்ட அம்புகளின் தொகுதி; குதிரையைக் களிற்றை ஆளை - குதிரைப் படையினையும், யானைப்படையினையும், காலாட்படையினையும்; தலை உறப்பட்டது அல்லால் - தலைகீழ் உறச் செய்ததன்றி; உடல்களில் தங்கிற்று உண்டோ - எந்த உடலிலும் தடைப்பட்டு நின்றதுண்டோ, இல்லை.

இராமன் அம்பை முன்னும் (3880, 3881, 4000) வியந்து பேசுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Though the army of sharp-tusked demons, huge as mountains,
  2. massed close and firm, was a hundred and two floods strong, his arrows,
  3. plunging straight into their ranks, struck horse and elephant and man
  4. and laid them headlong; did they ever stop, lodged in a body?'

What the poem says

A 'flood' (veḷḷam) is a vast unit for counting armies. Irāvaṇaṉ says that though his mountain-sized demons stood a hundred and two floods strong, Irāmaṉ's arrows went through cavalry, elephants and foot soldiers alike, never stopping in any body they struck.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘malai uṟap periyar āya vāḷ eyiṟṟu arakkar tāṉai
nilaiyuṟac ceṟinta veḷḷam nūṟṟu iraṇṭu eṉiṉum, nērē
kulai uṟak kuḷitta vāḷi, kutiraiyaik kaḷiṟṟai āḷait
talai uṟap paṭṭatuallāl, uṭalkaḷil taṅkiṟṟu uṇṭō?