கம்பராமாயணம் 7332 · யுத்த 15.19

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவன் கை வாளி போய பின் - அந்த இராமன் கையிலுள்ள வில்லிலிருந்து அம்பு வெளிப்படத் தொடங்கினால் அது; உலகு எலாம் புகுவது அல்லால் - உலகமெல்லாம் புகுந்து எய்த இலக்கைத் தேடிச் செல்வதல்லாமல்; ஓயும் என்று உரைக்கலாமோ - ஓய்ந்து விடும் என்று சொல்லலாமா? சொல்ல இயலாது; ஊழி சென்றாலும் - ஊழிக்காலம் ஆனாலும்; ஊழித் தீயையும் தீய்க்கும் - அவ்வூழிக்காலத்தில் தோன்றும் ஊழித்தீயையும் தீய்க்கும்; செல்லும் திசையையும் தீய்க்கும் - அவ்வம்பு செல்லுகின்ற திசைகளையெல்லாம் தீய்க்கும்; சொல்லும் வாயையும் தீய்க்கும் - மாறுபடப் பேசுவோர் வாயையும் தீய்க்கும்; முன்னின் மனத்தையும் தீய்க்கும் - மாறுபட எண்ணுவோர் மனத்தையும் தீய்க்கும்.

இராமனது அம்பின் கொடுமையை இப்பாடல் விளக்குகிறது. ஊழித்தீ, செல்லும் திசை மாறுபடப் பேசும் வாய், எண்ணும் மனம் ஆகியவற்றைத் தீய்க்கும் என்றது ஊழிக்காலம் என்னும் கால தத்துவத்தையும், திசைகள் என்ற இடஞ்சார் தத்துவத்தையும், வாய் என்ற உடல் உறுப்பையும் மனம் என்ற உருவமற்ற பொருளையும் கடந்து அழிக்கும் ஆற்றல் இங்கு விளக்கப்படுகிறது. மன், ஓ-அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Once it has left his hand, his arrow does nothing but enter every world;
  2. can one say it will ever rest, even if an age goes by? It
  3. burns even the fire of doomsday; it burns the very directions it travels; it burns
  4. the mouth that speaks against him; it burns even the mind that thinks against him.'

What the poem says

Irāvaṇaṉ describes the terror of Irāmaṉ's arrows. Once shot, an arrow hunts its target through every world and never tires, even over an age. It burns up the fire of the world's end, the directions, the mouth that speaks against Irāmaṉ and even the mind that thinks against him. The commentary notes that the arrow thus overcomes time, space, the body and the mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pōya piṉ, avaṉ kai vāḷi, ulaku elām pukuvatu allāl,
ōyum eṉṟu uraikkalāmō, ūḻi ceṉṟālum? ūḻit
tīyaiyum tīykkum; cellum ticaiyaiyum tīykkum; collum,
vāyaiyum tīykkum; muṉṉiṉ, maṉattaiyum tīykkum maṉṉō.