கம்பராமாயணம் 7333 · யுத்த 15.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேருவைப் பிளக்கும் என்றால்- மேரு மலையைப் பிளக்கும்படி சொன்னாலும், விண் கடந்து ஏகும் என்றால் - ஆகாயத்தைக் கடந்து அப்பால் ஏகுக என்று சொன்னாலும்; பாரினை உருவும் என்றால் - நிலவுலகை ஊடுருவுக என்று சொன்னாலும்; கடல்களைப் பருகும் என்றால் - கடல்களைப் பருகுக என்று சொன்னாலும்; அவற்றின் ஆற்றல் ஆருமே - அவ்வம்புக்கு ஆற்றல் நிரம்பி இருக்கும்; ஆற்றுமேல் - அவ்வம்பின் விரைவைத் தாங்குவதற்கு; அனந்த கோடி மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே - கோடிக்கணக்கான மேரு மலையும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும்.
நிலம், நீர் தீ, வளி, வான் என்ற ஐம்பூதங்களில் நிலம், நீர் விண் ஆகிய பூதங்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் உடையது இராமனின் அம்பு என்பதை இப்பாடலிலும், தீ எனும் பூதத்தை முந்தைய பாடலிலும் சுட்டிய ஆசிரியர் வளி போல் வேகமுடையது அவனது அம்பு என்பதைக் குறிக்க வளியை விலக்கி ஏனைய பூதங்களின் ஆற்றலை வெல்லும் தன்மையை விளக்கிக் காட்டியுள்ளார் ஆறுமே - அடங்குமோ (அடங்காது என்றபடி) எதுகை நோக்கி ஆருமே என்று நின்றது எனக் கொள்ளல் நேரிது. இத்துடன் 3878, 5185, ஆகிய எண்ணுள்ள பாடல்களை ஒப்பிட்டுச் சுவைத்துக் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'If they are told to split Mēru, if told to pass beyond the sky,
- if told to pierce the earth, if told to drink up the seas,
- their power will suffice; and to withstand them, endless crores
- of Mērus, and skies and earths and seas, would be needed.'
What the poem says
Irāvaṇaṉ goes on about Irāmaṉ's arrows. Whatever they are ordered to do, split Mēru, fly beyond the sky, pierce the earth or drink the oceans, they have the power for it. To absorb their force would take countless crores of mountains, skies, earths and seas.
The commentary notes that this verse and the one before show the arrow mastering the elements, earth, water, sky and fire; the wind is left out because the arrow is itself as swift as the wind.