கம்பராமாயணம் 7334 · யுத்த 15.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வரிசிலை நாணில் கோத்து - இராமன் கட்டமைந்த வில்லில் நாணைப்பூட்டி; வாங்குதல் விடுதல் ஒன்றும் - வளைத்தலையும் அம்பை விடுதலையும் ஆகிய ஒன்றையும்; அமரரேயும் தெரிகிலர் இமையா நாட்டத்துத் தேவர்களும் தெரிந்து கொள்ள முடியாதென்றால்; ஆர் அவன் செய்கை தேர்வார் - அவனுடைய அம்பு விடுந்திறனாகிய செய்கையை ஆய்ந்து அறியக் கூடியவர் யார் உளர்; பொருசினத்து அரக்கர் ஆவி - போரினைச் சினந்து செய்யும் அரக்கர்களுடைய உயிரை; போகிய போக என்று கருதவே - போக்குவதற்காகச் செய்க என்று சங்கற்பித்த அளவிலே; உலகம் எங்கும் சரங்களாய்க காட்டும் அன்றே - உலகம் முழுவதும் அம்பு மயமாய் ஆகிவிடும்.
வாங்குதல், விடுதல்-தொழிற்பெயர்கள் போகிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Fitting the arrow to the string of his banded bow, drawing it, loosing it — not one of these
- can even the immortals make out; who could follow what he does?
- The moment he thinks, "Let the lives of the battle-raging demons go,"
- the whole world shows itself as arrows.'
What the poem says
Irāmaṉ's archery is too fast to see. Even the gods, whose eyes never blink, cannot make out when he fits an arrow, draws or releases. As soon as he merely wills the death of the demons, the whole world seems filled with arrows.