கம்பராமாயணம் 7335 · யுத்த 15.22

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘நல் இயல் கவிஞர் நாவில்பொருள் குறித்து அமைந்த ஞானச்
சொல் என, செய்யுள் கொண்டதொடை என, தொடையை நீக்கி
எல்லையில் செல்வம் தீராஇசை என, பழுது இலாத
பல் அலங்காரப் பண்பேகாகுத்தன் பகழி மாதோ.

பொருள் · Meaning in Tamil

காகுத்தன் பகழி - இராமனுடைய அம்புகள்; நல் இயல் கவிஞர் - கருவில் திருவுடைக் கவிஞர்களின்; நாவில் பொருள் குறித்து அமர்ந்த - நாவில் பொருளுக்குத் தக வெளிப்பட்ட; நாமச் சொல் என - சிறப்புடைய சொற்கள் போலவும்; செய்யுள் கொண்ட தொடை என - செய்யுளில் அமைந்துள்ள தொடை போலவும்; தொடையை நீக்கி - தொடையைத் தாண்டி; எல்லையில் சென்றும் தீரா இசை என - அளவிட்டுச் சொல்ல முடியாத நீங்காத இசை போலவும், பழுதிலாத பல் அலங்காரப் பண்பே - குற்றமற்ற பலவகைப்பட்ட அலங்காரப் பண்பு கொண்டவை ஆகும்.

நல்இயல் கவிஞர் நாவிலிருந்து வரும் சொற்கள் பொருத்தமான இடத்தில் வந்து செய்யுளில் வேகம் குன்றாமல் விழுவது போல், இராமன் பகழியும் சரியான இலக்கைச் சரியான வேகத்தோடு சென்றடையும். இதனையே கம்பர் பிறிதோரிடத்தில் "சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுசரம்" (388) என்கிறார் கவிஞர் நாவரும் சொல் எனத் தொலைவிலாத் தூணி” (7130) என்பதை இதனுடன் ஒப்பிடுக. செய்யுளில் தொடை என்னும் ஒழுங்கு முறை இருப்பது போல் இராமன் பகழியும் ஒழுங்கும் பரந்து விரியும் தன்மையும் பெற்றது. செய்யுளின் அடி நாதமாக யாப்பிசை இருப்பது போல இராமன் பகழியின் வேகம் இசைவாக அமைந்துள்ளது. பல் அலங்காரப் பண்பு போல பகழியில் பல செயல்கள் ஒன்றுபட்டுள்ளன என்கிறார் கவிஞர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Like the noble words that settle, aimed at their meaning, on the tongues of poets of true gift,
  2. like the linked patterns a poem holds, like the music that passes beyond those patterns
  3. and, travelling to the limit, never ends — flawless,
  4. with the many graces of ornament, are the arrows of Kākuttaṉ.'

What the poem says

Irāvaṇaṉ, himself a learned singer, compares Irāmaṉ's arrows to fine poetry. They hit their targets as a great poet's words fall exactly on their meaning; they move in order like the linked patterns of a poem (toṭai, its schemes of rhyme and alliteration); their force goes on like the music of verse that outlasts its patterns; and they have the many beauties of poetic ornament. Kākuttaṉ (Kākutstha) is a family name of Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nal iyal kaviñar nāvil poruḷ kuṟittu amarnta nāmac
col eṉa, ceyyuḷ koṇṭa toṭai eṉa, toṭaiyai nīkki
ellaiyil ceṉṟum tīrā icai eṉa, paḻutu ilāta
pal alaṅkārap paṇpē kākuttaṉ pakaḻi mātō.