கம்பராமாயணம் 7336 · யுத்த 15.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரன் குலிச வேலும் - இந்திரனுடைய வச்சிராயுதமும்; ஈசன் கை இலை மூன்று என்னும் மந்திர அயிலும் - சிவபிரானின் கைகளில் உள்ள மூன்று இலை வடிவத்தைக் கொண்ட மந்திர ஆற்றல் பொருந்திய முத்தலைச் சூலமும்; மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் - திருமாலின் வளைந்த சக்கரப் படையின் வருகையையும் பல போர்களில் கண்டுள்ளேன்; அந்தரம் நீளிது அம்மா - அப்படைகளுக்கும் இராமனுடைய அம்புக்கும் வேற்றுமை மிகுதி; யான் தாபதன் அம்புக்கு ஆற்றா நொந்தனன் - இந்திரன் படை, ஈசன் கை மந்திர அயில், மாயோன் வளை எஃகின் வரவு ஆகியவற்றை எளிமையாகப் பொறுத்த யான் தவவேடம் பூண்ட இராமன் அம்புக்குப் பொறுக்க மாட்டாது நொந்தனன்; அலாதார் யார் அவை நோற்ககிற்பார்- யானல்லாத மற்றையோர் யார் அவ்வம்பின் ஆற்றலை எதிர்த்துத் தாங்க வல்லார்
அந்தரம்-வேற்றுமை, நோற்ககிற்பார் பொறுக்க வல்லவர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I have seen Intiraṉ's thunderbolt, and the spear in Īcaṉ's hand,
- charged with mantras, called the three-leaved, and the coming of Māyōṉ's curved discus;
- but the difference is vast, alas! Unable to bear the ascetic's arrows
- I am in pain; who but I could endure them?'
What the poem says
Irāvaṇaṉ has faced the greatest divine weapons in earlier wars: Indra's thunderbolt, Śiva's mantra-charged trident and Viṣṇu's discus. He bore them all easily. Yet the arrows of this man in hermit's dress hurt him beyond bearing; if even he cannot endure them, who could?