கம்பராமாயணம் 7338 · யுத்த 15.25

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சீர்த்த வீரியராய் உள்ளார் - மிகு புகழ் பொருந்திய வீரர்கள் எனப்படுபவர்களில்; செங்கண் மால் எனினும் - சிவந்த கண்களையுடைய திருமாலே என்றாலும்; அக்கார்த்த வீரியனை நேர்வார் உளர் என - அவர்கள் அந்தக் கார்த்த வீரியனுடைய ஆற்றலுக்கு ஒப்பாக உளர் என; யான் கருதல் ஆற்றேன் - நான் கருதுதலைச் செய்யேன்; பார்த்தபோது - எண்ணிப் பார்க்கும் இடத்து; அவனும் - அக்கார்த்த வீரியனும்; அத்தாபதன் தம்பி- அந்தத் தவக்கோலத்தையுடைய இராமனின் தம்பியாகிய இலக்குவனது; பாதத்து ஆர்த்தது ஓர் துகளுக்கு - பாதத்திலே ஒட்டிக்கொண்டுள்ள ஒரு தூசிக்கு; ஒவ்வான் - ஒப்பாக மாட்டான்; ஆர் அவற்கு ஆற்றகிற்பார்- (என்றால்) அந்த இராமனுக்கு முன் எதிர் நிற்க வல்லார் யார் எவருமில்லை என்றவாறு.

இராவணன் கார்த்த வீர்யாச்சுனனிடத்தில் தோற்றவன் ஆதலின் இங்கு அவனைப் பாராட்டிக் கூறினான். இதனை முன்வந்துள்ள 5203ம் பாடலோடு ஒப்பிட்டுக் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Among those renowned for valour, even red-eyed Māl — I
  2. cannot think that anyone equals that Kārttavīriyaṉ;
  3. yet when I consider it, even he is not worth one speck of dust
  4. clinging to the foot of that ascetic's brother; who could stand against him?'

What the poem says

Kārttavīrya Arjuna, the thousand-armed king, once defeated Irāvaṇaṉ and held him captive, so Irāvaṇaṉ rates him above every hero, even Viṣṇu. Yet now he says that Kārttavīrya is not worth the dust on Ilakkuvaṉ's feet. If that is the younger brother, who could ever face Irāmaṉ?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘cīrtta vīriyarāy uḷḷār, ceṅ kaṇ māl eṉiṉum, yāṉ ak
kārttavīriyaṉai nērvār uḷar eṉak karutal āṟṟēṉ;
pārtta pōtu avaṉum, maṟṟu at tāpataṉ tampi pātattu
ārttatu ōr tukaḷukku ovvāṉ;ār avaṟku āṟṟakiṟpār?