கம்பராமாயணம் 7339 · யுத்த 15.26

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘முப்புரம் முருங்கச் சுட்டமூரி வெஞ்சிலையும், வீரன்
அற்புத வில்லுக்கு, ஐயா!அம்பு எனக் கொளலும் ஆகா;
ஒப்பு வேறு க்கல் ஆவதுஒரு பொருள் இல்லை; வேதம்
தப்பின போதும், அன்னான்தனு உமிழ் சரங்கள் தப்பா.

பொருள் · Meaning in Tamil

ஐயா - ஐயனே; முப்புரம் ஒருங்கச் சுட்ட - முப்புரங்களையும் ஒருங்கே அழித்த; மூரி வெஞ்சிலையும் - வலிமை பொருந்திய சிவபிரானது வில்; வீரன் - இராமனது; அற்புத வில்லுக்கு - கோதண்டமாகிய அற்புத ஆற்றல் நிறைந்த வில்லுக்கு; அம்பு எனக் கொளலும் ஆகா - அம்பு என்று கொள்ளுவதற்கும் அதற்கு ஒப்பு என்று சொல்ல வேறு ஒரு பொருளும் இல்லை; வேதம் தப்பின போதும் - வேதம் ஓதுவதால் வரும் பயன்கள் ஓதியவரைச் சென்றடையாமல் தப்பினாலும்; அன்னான் - அந்த இராமனது; தனு உமிழ் சரங்கள் தப்பா - வில்லிலிருந்து வெளிப்படுகின்ற அம்புகள் இலக்குத் தவற மாட்டா.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even the mighty, cruel bow that burned the three cities at once, beside the hero's
  2. wondrous bow, sir, could not be reckoned even as an arrow;
  3. there is nothing else that can be named as its equal; even if the Veda
  4. should fail, the arrows his bow spits out never fail.'

What the poem says

Śiva's great bow, with which he burned the three flying cities of the demons, would not even rank as an arrow beside Irāmaṉ's bow, Kōtaṇṭam. Nothing compares with it. The Veda may fail to bring its promised reward, but Irāmaṉ's arrows never miss.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘muppuram oruṅkac cuṭṭa mūri veñ cilaiyum, vīraṉ
aṟputa villukku, aiyā! ampu eṉak koḷalum ākā;
oppu vēṟu uraikkal āvatu oru poruḷ illai; vētam
tappiṉa pōtum, aṉṉāṉ taṉu umiḻ caraṅkaḷ tappā.