கம்பராமாயணம் 734 · பால 11.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என் வேள்விக்கு - என் யாகத்திற்கு, கடிது - விரைந்து, இடையூறு இயற்றும் - தடைகளைச் செய்கின்ற; தீங்கு உடைய - கொடிய செயலையுடைய; கொடியோரை - தீய குணமுள்ள அரக்கர்களை; ஈங்கு இவரால் - இங்குள்ள இந்த இராம லக்குவரால்; கொல்விக்கும் - கொல்லச் செய்யவேண்டுமென்ற; சிந்தையனாய் - கருத்துடையவனாகி; பூங்கழலார் - பூவின் மென்மையுடைய வீரக் கழல்பூண்ட இம் மைந்தர்களை; கொண்டுபோய் - (தசரதனிடமிருந்து) அழைத்துக் கொண்டு; வனம் புக்கேன் - தவ வனத்துள் சென்றேன்; புகாமுன்னம் - (அவ்வாறு அவ் வனத்திற்குள்) சேர்வதற்கு முன்பே (சேர்ந்தவுடனே); தாங்க அரிய - (பிறரால் பொறுத்துக் கொள்ளமுடியாத; பேராற்றல் - மிக்க வலிமையையுடைய; தாடகையே - தாடகை என்னும் அரக்கியே; தலைப்பட்டாள் - முதலில் எதிர்த்து வந்தாள்.
'பூங்கழலார்க் கொண்டு போய் வனம் புக்கேன்' என்பதில் இவர்தம் மெல்லிய அடிகளைப் பரல் நிரம்பிய வனத்தில் நடக்கச் செய்தேனே என்ற இரக்கக் குறிப்பும் புலனாகின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Meaning to have these two kill the wicked ones who were swiftly
- bringing harm and hindrance to my sacrifice here,
- I took these boys of the flower-soft anklets and entered the forest; before we had entered,
- Tāṭakai of unbearable great strength confronted us.'
What the poem says
Vicuvāmittiraṉ describes the journey. He took the princes from Tacarataṉ so that they could kill the demons spoiling his sacrifice, and led them into the forest — the commentary hears a note of tenderness for their soft feet on the stony path. Before they had even reached the hermitage, the immensely strong demoness Tāṭakai attacked.