கம்பராமாயணம் 735 · பால 11.26

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐயா - மன்னவனே!; அலை உருவம் - அலைகளின் வடிவமாகக் காட்சியளிக்கின்ற; கடல் உருவத்து - கடல்போன்ற கரிய திருமேனியுடைய; ஆண் தகைதன் - ஆண்மைத் தன்மையுள்ள இந்த இராமனது; நீண்டு உயர்ந்த - நெடிதாக உயர்ந்துள்ள; நிலை உருவப்புயம் - நிலையான அழகுடைய தோள்களின்; வலியை - ஆற்றலை; நீ உருவ நோக்கு - நீ உற்றுப் பார்ப்பாயாக!; ஒருவாளி - (இராமனது தோள் வலியால் எய்யப்பட்ட) அம்பு ஒன்றுதான்; உலை உருவம் - உலைக் களத்திலுள்ள சிவந்த; கனல் உமிழ் கண் - நெருப்பைக் கக்குகின்ற கண்களையுடைய; தாடகை தன் - தாடகையினது; உரன் உருவி - மார்பைத் துளைத்து; மலை உருவி - (அடுத்து நின்ற) மலைகளையும் துளைத்து; மரம் உருவி - பல மரங்களையும் துளைத்து; மண் உருவிற்று - (எதிரே வேறு பொருள் இல்லாமையால்) நிலத்தையும் துளைத்துச் சென்றது.

'இராமனைச் சிறுவன் என்று கருதாதே; இவனது ஓர் அம்பு செய்த செயலால் இவனது வீரம் எத்தகையது என்று ஆராய்ந்து பார்' என்கிறான் முனிவன். அணி - திரிபு என்னும் சொல்லணி. பல பொருள்களையும் துளைக்குமாறு அம்பு எய்யும் வில் திறம் 'வல்வில்' என்ற அடையால் புலப்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Sir, look closely at the might of the tall, lofty, steadfast shoulders
  2. of this manly one whose form is the sea's, shaped of waves!
  3. A single arrow pierced the breast of Tāṭakai, whose eyes spat fire like a forge,
  4. pierced the mountains, pierced the trees, and pierced the earth.'

What the poem says

Vicuvāmittiraṉ invites Caṉakaṉ to judge Irāmaṉ's strength by one deed. A single arrow from his bow passed through the breast of Tāṭakai, whose eyes glowed like a smith's furnace, then through the hills behind her, through the trees, and finally into the earth.

The Tamil verse rings on the same verb, "pierce", with a play on similar-sounding words throughout — a sound figure the commentary names.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'alai uruvak kaṭal uruvattu āṇtakaitaṉ nīṇṭu uyarnta
nilai uruvap puya valiyai nī uruva nōkku, aiyā!
ulai uruvak kaṉal umiḻ kaṇ tāṭakaitaṉ uram uruvi,
malai uruvi, maram uruvi, maṇ uruviṟṟu oru vāḷi'