கம்பராமாயணம் 736 · பால 11.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செக்கர் நிறத்து - செவ்வானம் போன்ற நிறம் கொண்ட, எரி குஞ்சி - நெருப்புப் போல மயிர்களையுடைய; சிரம் குவைகள் - (எனது வேள்விக்கு இடையூறு செய்த அரக்கர்களின்) தலைகளின் குவியல்; பொருப்பு என்ன - மலைகளைப் போல; உக்கனவோ - அறுபட்டு விழுந்து கீழே சிதறியவற்றிற்கோ; முடிவு இல்லை - ஓர் அளவே இல்லை, அங்கு - அப்போது; (அந்த இடத்தில்); அரக்கி மக்களில் ஒருவன் - அத் தாடகையின் மைந்தர் இருவருள் ஒருவனான சுபாகு; ஓர் அம்பினொடும் - (இராமன் எறிந்த) அம்பு தைத்த மாத்திரத்தில்; போய் வான் புக்கான் - உயிர் நீத்து வானுலகம் சேர்ந்தான்; மற்றையவன் - மற்றொரு மைந்தனான மாரீசன்; புக்க இடம் - (இவன் எய்த அம்பால்) போய் விழுந்த இடத்தை; அறிந்திலேன் - யான் அறியவில்லை (இவ்வாறு இடையூறு அகப்பட்ட பின்பு); என் வினை முடித்து - என் வேள்வியை நிறைவாகச் செய்து முடித்து; போந்தனென் - (இங்கே) வந்தேன்.
பொருப்பு: இந்திரனால் சிறகு அரியப்பட்டு மண்ணில் விழுந்த மலைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There is no end to the heaps of heads with fiery hair, red as the sunset sky,
- that fell like mountains. Of the demoness's sons, one, with a single arrow,
- went there to heaven; where the other went
- I do not know. I completed my rite and came here.'
What the poem says
During the sacrifice, the demons' heads, with hair red as flame and sunset, fell in heaps like mountains — like the winged mountains whose wings Indra cut off. Of Tāṭakai's two sons, Cupāku died from a single arrow and went to heaven, and Mārīcaṉ was hurled by another arrow no one knows where. Then the sage completed his rite and came to Mitilai.