கம்பராமாயணம் 737 · பால 11.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய - அரசே!; அயற்கேயும் அறிவு அரிய - பிரமனாலும் அறிய முடியாத இராமனின் பெருமைகளை; ஆய்ந்து ஏற உணர் - ஆராய்ந்து முழுவதும் உணர்க; உலகு அனைத்தும் - உலகங்கள் எல்லாவற்றையும்; கடலோடும் - கடல்களுடனும்; மலையோடும் - மலைகளுடனும்; காய்ந்து - எரிந்து; தீய்ந்து ஏற - கரிந்து போகும்படி; சுடுகிற்கும் படைக்கலங்கள் - எரிக்கவல்ல படைக்கருவிகள்; செய் தவத்தால் - செய்த தவப் பயனால்; ஈந்தேனும் - பெற்றுக் கொடுத்த நானும்; மனம் உட்க - நெஞ்சு நடுங்குமாறு; இவற்கு ஏவல் செய்குந - இந்த இராமனுக்கு குற்றேவல் செய்து நிற்கின்றன.
'ஈந்தேனும் மனம் உட்க' என்றது தன்னிடத்திலும் இராமனிடம் ஆயுதங்கள் மிக்க அன்புபூண்டு பணி செய்கின்றன என்பதாம். ஆல், ஏ - அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Sir, examine and fully understand what even Ayaṉ cannot know.
- The weapons that, loosed in anger, can scorch all the worlds with their seas
- and mountains until they are burnt to cinders, which I won by my penance
- and gave him — they serve him so that even I who gave them tremble.'
What the poem says
The sage urges Caṉakaṉ to grasp a greatness that even Brahmā cannot fathom. The divine weapons he earned by penance and passed on to Irāmaṉ — weapons that could burn up all the worlds with their seas and mountains — now serve Irāmaṉ so devotedly that the sage himself, their former master, is awed.