கம்பராமாயணம் 738 · பால 11.29

Section பால காண்டம் / 11. குலமுறை கிளத்து படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இவன் - இந்த இராமனது; போது நின்றது என - செந்தாமரை (வாடி வதங்காமல் எப்பொழுதும் ஒரு தன்மையாகப் பொருந்தி நின்றது) என்னுமாறு; பொலிந்த - விளங்குகின்றன; பொலன் கழற்கால் - பொற்கழலை யணிந்த திருவடியின்; பொடி - தூளியே; கோதமன் தன் பன்னிக்கு - கௌதம முனிவனின் மனைவியான அகலிகைக்கு; முன்னை உரு - பழைய வடிவத்தை; கொடுத்தது கண்டாய் - (சாபம் நீக்கி) தந்து அருளியதைக் காண்பாய்; என்தன் உயிர் மேலும் - எனக்கு (எனது) உயிரிடத்து உள்ளதைக் காட்டிலும்; இக்கரியோன்பால் - கரிய இந்த இராமனிடத்தில்; காதல் உண்டு - அன்பு மிகுதியாக உள்ளது; இவன்தன் வரலாறும் - இந்த இராமனது தூய வரலாறும்; புய வலியும் - தோள் ஆற்றலும்; ஈது என - இதுவாம் என்று; உரைத்தான் - (கோசிக முனிவன் சனகனுக்குத் தசரதன் மகனான இராமனது பண்புகளைக்) கூறி முடித்தான்.

இராமனது திருவடி கூடப் பெருமைமிக்கது என்றால் இவன் திருமேனியின் பெருமை கூறல் வேண்டா என்பது. இராமன் கரிய நிறம் உடையவன். அதனால் இராமனைக் 'கரியோன்' என்றார். 'இவ்வளவு பெருமைமிக்க இராமனிடம் என் உயிரினும் எனக்கு அன்பு மிகுதியாக உள்ளது' என்றான் விசுவாமித்திரன். பன்னி - பத்நீ என்பதன் திரிபு. காதல் - பத்திமை. 'காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்' - திருமாலை - 26

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Know that what gave Kōtamaṉ's wife back her former form
  2. was the dust of his gold-anklet feet that shine like a lotus that never fades!
  3. I have more love for this dark one than for my own life.
  4. This is his story, and the might of his arms,' he said.

What the poem says

Vicuvāmittiraṉ finishes his account. The mere dust of Irāmaṉ's feet, lovely as an unfading lotus, gave Kautamaṉ's wife Akalikai back her true form; if his feet can do that, the greatness of the rest of him need not be told. He confesses that he loves this dark-skinned prince more than his own life.

This verse ends the canto of the royal lineage. The next canto tells of the breaking of the great bow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kōtamaṉtaṉ paṉṉikku muṉṉai uruk koṭuttatu ivaṉ
pōtu niṉṟatu eṉap polinta polaṅ kaḻaṟ kāl poṭi kaṇṭāy!
kātal eṉtaṉ uyirmēlum ik kariyōṉpāl uṇṭāl;
ītu ivaṉtaṉ varalāṟum puya valiyum' eṉa uraittāṉ.