கம்பராமாயணம் 739 · பால 12.1

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"மாற்றம் யாது உரைப்பது? மாயம் விற்கு நான்
தோற்ற ஆறு என, மனம் துளங்குகின்றது ஆல்,
நோற்றனள் நங்கையும், நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல், இடர் கடல் ஏற்றும்" என்றனன்.

பொருள் · Meaning in Tamil

(சனகன் விசுவாமித்திரனை நோக்கி) மாற்றம் யாது - உமது வார்த்தைக்கு மாற்றமாக என்ன; நான் உரைப்பது - நான் சொல்ல இருக்கின்றது; மாய விற்கு - வஞ்சனையமைந்த இந்த வில்லை; கன்னியின் திருமணத்திற்கு காரணமாக வைத்தால்; மனம் - (எனது) விருப்பம்; தோற்றனென் என - தோற்றுவிட்ட தன்மையை எண்ணும்போது; துளங்குகின்றது - மிகக் கலங்குகின்றது; ஐயன் - வியத்தகு பண்புகளையுடைய இக்குமாரன்; நொய்தின் - விரைவாக; வில் ஏற்றுமேல் - சிவ தனுசை வளைத்து நாண் ஏற்றுவானேயானால்; இடர்க்கடல் ஏற்றும் - (என்னையும்) துயரக் கடலிலிருந்து கரையேற்றினவனாவான்; நங்கையும் - என் மகளான சீதையும்; நோற்றனள் - (முன் செய்த) தவப்பேற்றைப் பெற்றவளாவாள்; என்றனன் - என்று கூறினான்.

முனிவரே! இம் மைந்தரின் குலவரலாற்றோடு தோள்வலிமையையும் கூறினீர். உமது வார்த்தைக்கு மறுமாற்றம் சொல்வேனோ? ஆனால் பெண்ணின் திருமணத்தின் பொருட்டு வைத்த இந்த வில்லை இதுவரை எந்த வீரரும் வளைத்து நாணேற்றினாரில்லை; அதனால் என் மகள் திருமணமும் நடைபெறாமல் என் மனம் கலங்கியுள்ளது. இச் சிவ தனுசை இச் சிறுவன் நாணேற்றினால் என் துன்பமும் நீங்கும்; இச் சீதையும் தவப் பேற்றைப் பெற்றவளாவாள் என்றான். எவராலும் வளைக்கமுடியாமல் இருந்ததால் இதனை 'மாயவில்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "What answer can I give? My mind trembles as I think
  2. that I have been defeated by this bewitched bow;
  3. if the noble one swiftly strings the bow, my daughter's penance will have borne fruit,
  4. and he will lift me out of a sea of sorrow," he said.

What the poem says

The canto of the bow begins. Caṉakaṉ has nothing to dispute in the sage's account. His sorrow is that he set Śiva's great bow as the test for his daughter's hand, and no hero has been able to bend and string it, so her marriage has never taken place. He calls it a bewitched bow for that reason. If this young prince can string it, Caṉakaṉ will be rescued from his grief and Cītai's penance will have been rewarded.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"māṟṟam yātu uraippatu? māya viṟku nāṉ
tōṟṟaṉeṉ eṉa, maṉam tuḷaṅkukiṉṟatāl,
nōṟṟaṉaḷ naṅkaiyum, noytiṉ aiyaṉ vil
ēṟṟumēl, iṭark kaṭal ēṟṟum" eṉṟaṉaṉ.