கம்பராமாயணம் 7341 · யுத்த 15.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மனிதன் வல்வில் - மனிதனாகிய இராமன் கைக்கொண்டுள்ள வலிமையான வில்; குடக்கதோ - மேற்குப் பகுதியில் உள்ளதா?; குணக்கதோ - மேற்குப் பகுதியில் உள்ளதா?; கோணத்தின் பாலதேயோ- திசை மூலைப் பகுதியில் உள்ளதா?; வடக்கதோ- வடக்குப் பகுதியில் உள்ளதா? தெற்கதோ - தெற்குப் பகுதியில் உள்ளதா? தடத்த பேர் உலகத்தேயோ - அகன்ற பெரிய உலகத்திலுள்ளதா? விசும்பதோ - ஆகாயத்தில் உள்ளதா? எங்கும் தானோ - எல்லா இடங்களிலும் உள்ளதா? என்று உணர்ந்திலன் - என்று அவனுடன் போரிட்ட யான் உணர்ந்தேன் இல்லை; யானும் இன்னும் - இன்னும் கூட யான் அது; இடத்ததோ - இடப்புறத்தில் உள்ளதா? வலத்ததோ - வலப்புறத்தில் உள்ளதா என்று உணர்ந்திலேன் - என்று உணர முடியாதவனாய் உள்ளேன்.
எங்கிருந்து அம்பு எய்யப்படுகிறது என்று நின்று நிதானித்துப் பார்த்து அறிந்து கொள்ள முடியாதவாறு இராமன் அம்பு மழை பொழிந்ததால், எத்திசையில் இருந்து (அல் எப்புறத்தில் இருந்து வில் அம்பு பொழிகிறது என்பதை அறியமுடியவில்லை என்று இராமனின் வில்லாற்றலை இராவணன் இப்பகுதியில் குறிப்பிடுகிறான். தடத்த - அகன்ற.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Is it in the west? Is it in the east? Is it in some corner between?
- Is it on the broad, great earth? Is it in the sky? Is it everywhere?
- Is it in the north? Is it in the south? I could not tell; that man's mighty bow —
- is it on his left? Is it on his right? Even now I cannot tell.'
What the poem says
Irāmaṉ's arrows came so thick and fast that Irāvaṇaṉ could not tell where they were coming from: east or west, north or south, earth or sky, or everywhere at once. Even now he cannot say whether Irāmaṉ held his bow in his left hand or his right.