கம்பராமாயணம் 7343 · யுத்த 15.30

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொறையினால் உலகம் போலும் - அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல் பொறுமையுடைய; வேய் எனத் தகைய தோளி - மூங்கில் எனத் தகுந்த தோளினையுடைய சீதை, இராகவன் மேனி நோக்கி - இராமனின் திருமேனி அழகையும்; தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால் - தீயினை ஒத்த பெரும் போர் வீரத்தையும் முன்பே கண்டிருத்தலால்; காமனும் நாமும் - மன்மதனும் யாமும்; எல்லாம்- மற்றையோரும்; நாய் எனத் தகுதும் அன்றே - அவளுக்கு நாய் என்று சொல்வதற்குத் தகுவோம் அல்லவா?; போய் இனித் தெரிவது என்னே - இனிமேல் போய் அவளது மனத்தைத் தெரிய என்ன உள்ளது என்றவாறு.

இராமனின் திருமேனியழகையும் பெரும் போர் வீரத்தையும் சீதை கண்டிருத்தலால் போய் இனித் தெரிவது என்னே என்றான் என்க. சேவகம் - வீரம். (மிக்கவீரம்) "தோளி இராகவன்” என்ற இசைவு அவளுக்கேற்றவன் அவனே என்ற இராவணன் உள்ளுணர்வை வெளிப்படுத்தியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'What is there now to find out by going to her? She, patient as the earth,
  2. whose shoulders are rightly likened to bamboo, has looked upon Irākavaṉ's form
  3. and seen his deeds of heroic valour, fierce as fire;
  4. beside him, Kāmaṉ and I and all of us are fit to be called dogs.'

What the poem says

Irāvaṇaṉ's thoughts turn back to Cītai. There is no point in going to her again to sound out her mind: she has seen Irāmaṉ's beauty and his fiery valour. Next to him, even Kāmaṉ, the god of love, and Irāvaṇaṉ himself are no better than dogs in her eyes. The commentary notes that the poet places her name and Irāmaṉ's side by side in the verse, as if Irāvaṇaṉ himself knows they belong together.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pōy iṉit terivatu eṉṉē? poṟaiyiṉāl ulakam pōlum
vēy eṉat takaiya tōḷi irākavaṉ mēṉi nōkki,
tī eṉak koṭiya vīrac cēvakac ceykai kaṇṭāl
nāy eṉat takutum aṉṟē kāmaṉum nāmum ellām.