கம்பராமாயணம் 7344 · யுத்த 15.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூசல் வண்டு உறையும் தாராய் - ஒலிக்கும் வண்டுகள் தங்குகின்ற மாலை அணிந்த மார்பினனே; வாசவன் - இந்திரன்; மாயன் - திருமால்; மற்றை மலருளோன் - மற்றும் உள்ள தாமரை மலரில் உறையும் நான்முகன்; மழுவாள் அங்கை ஈசன் - மழுப்படையைக் கையில் கொண்ட சிவன்; என்று இனைய தன்மை - என்று இப்படிப்பட்ட தன்மை கொண்ட; இளிவரும் இவரால் அன்றி - இகழ்ச்சிக்குரிய தன்மை கொண்ட இவர்களன்றி; நாசம் வந்து உற்றபோதும் - அழிவுக்காலம் வந்து நெருங்கி விட்ட போதும்; நல்லது ஓர் பகையைப் பெற்றேன் - சிறந்தது ஓர் பகையை அடைந்தேன்; இது இங்குப் புகுந்தது என்றான் - இதுவே இங்கு நிகழ்ந்தது என இராவணன் மாலியவானிடம் கூறினான்.
பகைவனைப் பற்றிப் புரிந்து கொண்டுள்ள இராவணன் நாசம் வந்துற்ற போது நல்லதோர் பகையைப் பெற்றேன் என்கிறான், பிறிதோரிடத்தில் 'என்னையே நோக்கி யான் இந்நெடும் பகை தேடிக்கொண்டேன் (9123) என்பதை இணைத்து நோக்குக. இளிவரும் - இகழ்ச்சிக்கு ஆளான இவர் பகைவனை மனம் திறந்து பாராட்டும் இயல்பு இராவணன் பால் முன்னைய படலத்தும் கண்டதே ஆகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Not from Vācavaṉ, from Māyaṉ, from the other who sits upon the flower,
- or from Īcaṉ with the axe in his fair hand — such contemptible ones as these — but
- even as ruin comes upon me, I have found a worthy enemy;
- you whose garland is home to humming bees, this is what has happened here,' he said.
What the poem says
Irāvaṇaṉ ends his account to Māliyavāṉ. The gods he fought before, Indra (Vācavaṉ), Viṣṇu (Māyaṉ), Brahmā on his lotus and Śiva with his axe, were contemptible foes. Now, as ruin approaches, he has at last met an enemy worthy of him. The commentary observes that Irāvaṇaṉ has a gift for frankly praising his enemy.