கம்பராமாயணம் 7345 · யுத்த 15.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நெருப்பு உரைத்தாலும் - நெருப்பை உவமை என உரைத்தாலும்; நீண்ட மின் உரைத்தாலும் - வானத்தில் தோன்றும் நீண்ட மின்னலை உவமை என உரைத்தாலும்; ஒவ்வா விளங்கு ஒளி - ஒப்பாகாது விளங்குகின்ற ஒளியுடைய; அலங்கல் வேலோய் - வெற்றி மாலை சூடிய வேற்படையை உடைய தலைவனே; முன் உரைத்தேனை வாளா முனிந்தனை - முன்பு இராமனின் ஆற்றலைக் கூறிய என்னை வீணே கோபித்தாய்; முனியா உம்பி - சினமென்னும் குணம் இல்லாத உன்னை ஒரு பொழுதும் வெறுக்காத வீடணன் கூறிய; இன் உரைப் பொருளும் கேளாய் - இனிய சொற்களில் பொதிந்துள்ள உட்பொருளையும் காதால் கேட்காமல் விட்டாய்; ஏது உண்டு எனினும் ஓராய் - நீ தோல்வியடையப் போவதற்குக் காரணம் உண்டு என்றாலும் அதை ஆராய்ந்து அறியாது விட்டு விட்டாய்; நின் உரைக்கு உரை வேறு உண்டோ - எனினும் உன் சொல்லுக்கு மறுசொல் உண்டா என்கிறான் மாலியவான்.
முன் உரைத்தேனை வாளா முனிந்தனை என்ற வரி ஒற்றுக் கேள்விப் படலத்தில் மாலியவான் கூற்றை மறுத்தது. (6792, 6793) முனியா உம்பி இன் உரைப் பொருளும் கேளாய் என்பதை மேதாவிகட்கெல்லாம் மேலான மேன்மையனாகிய வீடணன் அறவுரை கூறிய போது (6371) இராவணன் மறு மொழி கொண்டு அறிக. ஏது உண்டு எனினும் ஓராய்-என்பதை (6148, 6150, 6151) பாடல்களில் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'You raged, for nothing, at me who warned you before; your brother, who never resented you —
- you would not hear the meaning of his sweet words; though there was reason, you did not weigh it;
- can there be any word against your word? Though one name fire, though one name the long
- lightning, they cannot match the gleam of your garlanded spear, my lord.'
What the poem says
Māliyavāṉ replies. Earlier he had told Irāvaṇaṉ of Irāmaṉ's might and been angrily rebuffed; Vīṭaṇaṉ, the brother who bore him no ill will, had given gentle, sound advice and been ignored; the signs of coming defeat were plain, yet Irāvaṇaṉ never considered them. Still, he says with weary irony, who can contradict the king? He praises the splendour of the king's spear even as he blames him.